தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவு
சென்னை: சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் உட்பட தமிழகத்தில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யபட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
தமிழகத்தில் அடிக்கடி ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தலைமை செயலாளர் பிறப்பித்துள்ள உத்தரவில்,

ரீட்டா ஹரீஷ் தாக்கர் - மறுவாழ்வுத்துறை அரசு செயலாளர்
நந்தகுமார் - மனிதவள மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர்
நாகராஜன் - நிதித்துறை (செலவினம்) அரசு செயலாளர்
சி ஜி தாமஸ் வைத்யன் - மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத்துறை
சரவண வேல்ராஜ் - புவியியல் சுரங்கத்துறை ஆணையர்
அன்பழகன் - சர்க்கரைத்துறை ஆணையர்
பிரஜேந்திர நவ்நீத் - வணிக வரித்துறை முதன்மை செயலாளர்
சமீரன் - வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குநர்
சிவகிருஷ்ணமூர்த்தி - சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்)
பூஜா குல்கர்னி - உட்கட்டமைப்பு வாரிய செயல் அதிகாரி, நிதித்துறை சிறப்பு செயலாளர்
அலர்மேல் மங்கை - கைடன்ஸ் தமிழ்நாடு செயல் இயக்குநர்
லலிதாதித்யா நீலம் - சேலம் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி)
ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே முன்னதாக நேற்று சென்னையின் 40 காவல் ஆய்வாளர்கள் திடீரென அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டிருந்தனர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகள் நடைபெற்று, முடிவுற்று புதிய அரசு மத்தியில் பதவியேற்றுள்ளது. முன்னதாக, தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications