ஆஹா.. அர்ஜுன் சம்பத் வேற ஆரம்பிச்சிட்டாரே.. "பூப்பூவாய் பூப்போம் வா".. இன்று காதலர் தின கொண்டாட்டம்
இன்று பிப்ரவரி 14 காதலர் தினம் கொண்டாடுவோரை கைது செய்ய டிஜிபி அலுவலகத்தில் மனுதரப்பட்டுள்ளது
சென்னை: உலகம் முழுவதும் வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினம் இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் காதலர் தின கொண்டாட்டம் களை கட்டி வருகிறது என்றாலும் சில எதிர்ப்புகளும் வெடித்து வருகின்றன.
''காதல்'' இந்த ஒற்றை சொல் உருவாக்கிய காவியங்களும், காப்பியங்களும் உலகில் ஏராளம்... காதலை சொல்லாத இலக்கியம் இல்லை.. காதலை சொல்லாத மொழிகள் இல்லை.. காதலை உணராத உயிர்கள் இல்லை.
பூக்கள் மட்டுமல்லாமல், போர்க்களங்களையும் திரண்டு கொண்டதுதான் காதல்.. காதலுக்கு வயது கிடையாது.. மொழி கிடையாது.. இனமும், மதமும் கிடையாது.. தூரங்கள் துளியும் கிடையாது..

மனிதகுலம்
ஒருவரையொருவர் நேரில் பார்க்காமல் உணர்வுகளால் காதலித்தது முதல் இன்றைய 2K கிட்ஸ்களின் ஆன்லைன் காதல் வரை, படர்ந்து விரிந்து, காலம் காலமாக நம்முடனேயே பயணித்து வருகிறது காதல்.. ஜீவராசிகள் அனைத்தையும் ஒரு புள்ளியில் இணைத்து காட்டுவது, காதல் என்ற உணர்வுபூர்வமான விஷயம் மட்டுமே.. ஒவ்வொரு நிமிடமும் காதலில் மனிதகுலம் மூழ்கி திளைத்தாலும், இந்த தினத்தை கொண்டாடவே, காதலர் தினத்தையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர்.. ஆண்டுதோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு காரணங்கள் கதைகளாக கூறப்பட்டும் வருகிறது.

கலாச்சாரம்
அன்பை பரிமாற்றிக் கொள்வதும், தன் மேல் இருக்கின்ற ஒரு நம்பிக்கை, பாசம் அனைத்தும் வெளிப்படுத்துவதும் என இன்றைய தினத்தை மகிழ்ந்து கொண்டாடுகிறது இந்த உலகம்.. மேற்கத்திய கலாச்சாரமாக இதை கருதப்பட்டாலும், காதல் என்ற உணர்வு பொதுப்படையானதால், நம் இந்தியாவிலும் இதற்கான வரவேற்புகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.. பீச், பார்க்குகள், ஹோட்டல்கள் என பல இடங்களுக்கு சென்று, காதலர்கள் தங்கள் மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இந்த நாளை பயன்படுத்தி கொண்டு வருகிறார்கள்.

ரோஜாக்கூட்டம்
காதலர் தினத்தில் காதலர்கள் ஒன்றாக சேர்ந்து மகிழ்ச்சியை கொண்டாடுவதற்காக வெளியே சென்று வருவது தான் காதலர்களின் சிறப்பு ஆகும்.. அதன்படி, உலகமே ரோஜாப்பூக்களுடன் இன்றைய தினத்தை கொண்டாடி வருகிறது.. வழக்கமாக இந்த நாளுக்கு முதல் நாளே, ரோஜாக்களுக்கும், கொய்மலர்களுக்கும் பெரும் தேவை இருக்கும்... அதனால் விலையும் உச்சமாகி விடும். அந்த வகையில் நம் தமிழ்நாட்டின் பூ மார்க்கெட்டுகளில் ரோஜாப்பூக்களின் விலை நேற்று பல மடங்கு உயர்ந்திருந்தது... வழக்கமாக 10 நம்பர் கொண்ட ஒரு கட்டு 150 ரூபாய்க்கு விற்பது நேற்று 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சிகப்பு மற்றும் இளம் சிகப்பு நிறங்களில் உள்ள சாதாரண ரோஜா ஒன்று ஒரு ரூபாய்க்கும், கிலோ 500 ரூபாய்க்கும் விற்றது.

இந்து முன்னணி
வழக்கமாக, இந்த காதலர் தினத்தை கொண்டாட இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.. காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாய் மற்றும் கழுதைக்குத் திருமணம் செய்து வைத்தும் வருகின்றனர்.. காதலர் தினத்திற்கு பதிலாக பசுமாட்டை அரவணைக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என விலங்குகள் நலவாரியம் கோரிக்கை விடுத்தது... ஆனால், அந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அது திரும்ப பெறப்பட்டுவிட்டது. ஆனாலும், இந்து முன்னணி பசுவை கட்டிப்பிடிப்பதாக சொல்லி உள்ளது.. காதலர் தினத்தன்று இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பசுமாட்டை அரவணைக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்திருக்கிறார்.

கழுதைக்கும் கழுதைக்கும்
இந்நிலையில், தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பில் டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் , காதலர் தினத்தை முன்னிட்டு சமூக விரோதிகள் சிலர் காதலர்களை, தாக்குவது, காதலுக்கு எதிராக சமூகவிரோத செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடவுள்ளனர். காதலர்களுக்கு இடையூறு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.. எனினும், ஆயிரம் எதிர்ப்புகள், கட்டுப்பாடுகள், கண்டனங்கள், கைதுகள் வந்தாலும், அனைத்தையும் நொறுக்கி தள்ளிவிட்டு இன்றைய தினம், தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள் காதலர்கள்..!!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications