"கேம் ஓவர்?".. தூண்டிலில் "பெரிய" தலை.. வைத்திலிங்கமா இப்படி.. 15 பேர் வேற? ஷாக்கில் எடப்பாடி டீம்
எடப்பாடி பழனிசாமி தரப்பின் 15 மா.செ.க்கள் ஓபிஎஸ் டீம் பக்கம் தாவ போகிறார்களாம்
சென்னை: ஏற்கனவே தலைநகரத்தில் உள்ள 4 மா.செ.க்கள், ஓபிஎஸ் பக்கம் தாவ போவதாக தகவல்கள் பரவிய நிலையில், இந்த அணி தாவல்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.. இது எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த சறு்கலை தந்து ஏற்படுத்தி வருகிறதாம்.
அதிமுக விவகாரம், இன்னமும் அதே பரபரப்பு அடங்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.. எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட சிக்கல்கள் கூடிவிட்ட நிலையிலும்கூட, ஒற்றை தலைமை விவகாரத்தை விட்டுத்தராமல் உள்ளார்.
முன்பின் யோசிக்காமல் அவசர அவசரமாக பொதுக்குழு கூட்டப்பட்டதாலும், அதன்மூலம் சட்டத்தின் நெறிமுறைகளை தவறவிட்டார் எடப்பாடி பழனிசமி.. அந்த சட்டத்தின் ஓட்டைகள்தான், இன்று ஓபிஎஸ்ஸுக்கு பலமாகி கொண்டிருக்கின்றன.

அசைன்மென்ட்
இன்றைய தினம்கூட, அதிமுகவில் ஒற்றை தலைமை வழக்கு விசாரணைக்கு வந்தது.. "ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும் என பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் விரும்பியதால் தான், ஜூலை 11- ல் பொதுக்குழு கூட்டப்பட்டது என்றும், இதில் கட்சி விதிகள் ஏதும் மீறப்படவில்லை. இனிமேலும், ஓபிஎஸ் உடன் இணைந்து கட்சியை செயல்படுத்த வாய்ப்பே இல்லை" என எடப்பாடி பழனிசாமி தரப்பில் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்கள்.

ஸ்கெட்ச்
இந்த கறார்தன்மை, எடப்பாடிக்கு மேலும் சிக்கலை தரும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. காரணம், கடந்த மாதம், இருந்த அளவுக்கு அதே பலம் எடப்பாடி தரப்புக்கு இல்லை என்றே தெரிகிறது.. பாதிக்கு பாதி பேர், இந்தப்பக்கமே தொடர்வதா? ஓபிஎஸ் பக்கம் தாவுவதா? என்ற குழப்பத்தில் உள்ளனராம்.. அப்படி குழப்பத்தில் உள்ளவர்களுக்குதான் ஸ்கெட்ச் போட்டு தூக்கி வருகிறது ஓபிஎஸ் டீம்.. இதற்கான அசைன்மென்ட்தான் வைத்திலிங்கத்துக்கு சில நாட்களுக்கு முன்பு தரப்பட்டது.. அதன்படி, எடப்பாடி தரப்பில் இருந்து மெல்ல மெல்ல ஓபிஎஸ் டீமுக்கு காலடி எடுத்து வைப்பதற்கான சூழலும் நடந்து வருகிறது.

பெரிய தலை
சேலத்தில் ஒரு மாஜி பெண் அமைச்சர், ஓபிஎஸ் வர தயாராக இருக்கிறாராம்.. 4 சென்னை மாவட்ட செயலாளர்கள், ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்துள்ளார்களாம்.. இதைதவிர, தென்மண்டலத்தில் இருக்கும் ஒரு மாஜி அமைச்சரும் ஓபிஎஸ் பக்கம் வர தயாராகிவிட்டாராம்.. ஆனால் அவர் கோரிக்கையை, ஓபிஎஸ் தரப்பிடம் முன்வைத்துள்ளாராம்.. அதன்படி, "நாங்கள் எடப்பாடிவுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்று நினைக்காதீர்கள்.. எங்களுக்கு தருவதாக சொன்ன பொறுப்புகளை நம்பி நிறைய செலவு செய்துவிட்டோம்.. இப்போது விழித்துக் கொண்டிருக்கிறோம்" என்றாராம்..

கழியும் கணக்கு
அதாவது, ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தந்தால், "கவனிக்க" வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.. இந்த மெசேஜ்ஜை வைத்திலிங்கம், ஓபிஎஸ் தரப்புக்கு பாஸ் செய்ய, அவரும் அந்த கோரிக்கைக்கு பச்சைக்கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது.. எனவே, அந்த தென்மண்டல மாஜியும், ஓபிஎஸ் பக்கம் விரைவில் வரப்போவதாக கூறப்படுகிறது. சென்னையின் 4 மாவட்ட செயலாளர்கள் தவிர, மேலும் மேலும் 15 மாவட்ட செயலாளர்களுக்கும் கொக்கி போடப்பட்டுள்ளதாம்... எப்படியும் பொதுக்குழு குறித்து ஒரு உறுதியான தீர்ப்பு கிடைப்பதற்குள், ஓபிஎஸ் பலமும் பெருகிவிடும், எடப்பாடியின் கூடாரமும் மெல்ல மெல்ல கரைந்து விடும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் ஓபிஸ் தரப்பில்..!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications