பிரம்மோஸ் மீது கண் வைத்த.. 17 பலம் வாய்ந்த நாடுகள்.. இந்தியாவிற்கு பறந்த அவசர மெசேஜ்.. என்ன ஆச்சு?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரம்மோஸின் புகழ் உலக அளவில் உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க பெரிய 17 நாடுகள் இதை வாங்குவதற்காக வரிசையில் உள்ளன. பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பில் உள்ள ஏவுகணைகளில் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றாகும்.

இது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கூட்டுத் திட்டமாகும். "பிரம்மோஸ்" என்ற பெயர் இரண்டு நதிகளில் இருந்து வந்தது - இந்தியாவில் உள்ள பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவில் மோஸ்க்வா. இந்த ஏவுகணைகளில் ஏவுகணை நவீன போர் யுக்தியில் இந்தியாவுக்கு மிக அதிக பவரை வழங்க கூடிய ஏவுகணை ஆகும். இது ரேடார் கண்டறிதலைத் தவிர்ப்பதற்காக தரை அல்லது கடல் மேற்பரப்புக்கு அருகில் தாழ்வாகப் பறக்க முடியும். இது தடைகளைத் தவிர்க்கவும், சரியான இலக்கை அடையவும் உதவும். பல நாடுகள் இதை வாங்க ஆர்வம் காட்டுவதற்கு பின் இந்த முக்கியமான காரணமும் உள்ளது.

பிரம்மோஸ் ஏன் அதிக சக்தி வாய்ந்தது?

அதிவேக வேகம்: பிரம்மோஸ் மாக் 2.8 முதல் 3 வேகத்தில் பயணிக்க கூடியது(ஒலியின் வேகத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு). இது சூப்பர்சோனிக் ஏவுகணையாகும். இந்த வேகம் காரணமாக எதிரி நாடுகள் அதை சரியான நேரத்தில் கண்டறிந்து நிறுத்துவது மிகவும் கடினம்.

உயர் துல்லியம்: தாக்கப்பட வேண்டிய இலக்கு நகர்ந்தாலும், பிரம்மோஸ் அதன் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும். இது எதிரி கப்பல்கள், பதுங்கு குழிகள் மற்றும் இராணுவ தளங்கள் உட்பட தரை மற்றும் கடல் இலக்குகளை எளிதாக தாக்க முடியும்.

17 countries are showing massive interest to buy Brahmos missile from India

நீண்ட தூரம்: முதலில் இந்த ஏவுகணை 290 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. ஆனால் இப்போது, ​​புதிய மாற்றங்கள் மூலம் 400 கிலோமீட்டர்களுக்கு மேல் பயணிக்க முடியும். சில மேம்படுத்தப்பட்ட அப்டேட் மாடல்கள் 500 கிலோமீட்டருக்கு அப்பால் செல்லும் திறன் கொண்டது..

எங்கிருந்து தாக்கும்:

நிலம் (மொபைல் லாஞ்சர்கள்)

ஏர் (Su-30MKI போன்ற போர் விமானங்கள்)

கடல் (போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்)

இந்த மும்முனை தாக்குதல் காரணமாக.. போர் மோதலின் போது ஏவுகணை எங்கிருந்து வரும் என்று கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

17 நாடுகள் ஆர்வம்:

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பிரம்மோஸின் புகழ் உலக அளவில் உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க பெரிய 17 நாடுகள் இதை வாங்குவதற்காக வரிசையில் உள்ளன.

தற்போது வரை பிரமோஸுக்கான உறுதிப்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைக் கொண்ட ஒரே நாடு பிலிப்பைன்ஸ் ஆகும். இது போக மேலும் 16 நாடுகள் இதை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளன. ஜனவரி 2022 இல் மூன்று கடலோர பாதுகாப்பு பிரம்மோஸ் ஏவுகணைக்காக $375 மில்லியன் ஒப்பந்தத்தில் பிலிப்பைன்ஸ் கையெழுத்திட்டது. முதல் ஏவுகணை ஏப்ரல் 2024 இல் வழங்கப்பட்டது, இரண்டாவது ஏவுகணை ஏப்ரல் 2025 இல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசியா: பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணையின் மேம்பட்ட பதிப்பை வாங்குவதற்கு இந்தோனேசியா 200-350 மில்லியன் டாலர் ஒப்பந்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

வியட்நாம்: வியட்நாம் அதன் இராணுவம் மற்றும் கடற்படை இரண்டிற்கும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்காக 700 மில்லியன் டாலர் ஒப்பந்தத்திற்கு திட்டமிட்டுள்ளது.

மலேசியா: மலேசியா அதன் சுகோய் Su-30MKM போர் விமானங்கள் மற்றும் கெடா- பிரிவு போர்க்கப்பல்களுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பரிசீலித்து வருகிறது.

தாய்லாந்து, சிங்கப்பூர், புருனே: இந்த தென்கிழக்கு ஆசிய நாடுகள் பிரம்மோஸ் வாங்க ஆர்வம் காட்டியுள்ளன, இதற்கான பேச்சுவார்த்தைகள் பல்வேறு கட்டங்களில் உள்ளன.

பிரேசில், சிலி, அர்ஜென்டினா, வெனிசுலா: இந்த லத்தீன் அமெரிக்க நாடுகள், பிரம்மோஸ் ஏவுகணையின் கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு வகை ஏவுகணைகளை வாங்க ஆலோசனை செய்து வருகின்றன..

எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), கத்தார், ஓமன்: இந்த மத்திய கிழக்கு நாடுகளும் பிரம்மோஸை வாங்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்தும் வருகின்றன.

ஹெவி போர்ஹெட்:

இந்த பிரம்மோஸ் ஏவுகணை கனமான முன்பகுதியை கொண்டது. அதாவது ஹெவி போர்ஹெட். 200 முதல் 300 கிலோ வரை எளிதாக சுமந்து செல்ல கூடியது. இது பெரிய கட்டமைப்புகள், எதிரி போர்க்கப்பல்கள் அல்லது முக்கியமான பாதுகாப்பு வசதிகளை ஒரே தாக்குதலின் மூலம் அழிக்க முடியும்.

ஸ்டெல்த் முறை மற்றும் ஸ்மார்ட் வழிகாட்டுதல்:

இது ரேடார் கண்டறிதலைத் தவிர்ப்பதற்காக தரை அல்லது கடல் மேற்பரப்புக்கு அருகில் தாழ்வாகப் பறக்க முடியும். இது தடைகளைத் தவிர்க்கவும், சரியான இலக்கை அடையவும் உதவும். அதேபோல் இதற்கென்று வடிவமைக்கப்பட்ட ஜிபிஎஸ் முறையில்.. மேம்பட்ட வழிகாட்டுதல் அமைப்புகளை இது பயன்படுத்தும்.

இந்தியா இதை பயன்படுத்த முடிவு செய்தால் ஏன் பாகிஸ்தானால் தடுக்க முடியாது?

இதன் வேகம் காரணமாக பாகிஸ்தான் ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்புகள் இதை தடுக்க முடியும் .

பாகிஸ்தானின் தற்போதைய ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் பிரம்மோஸ் போன்ற ஏவுகணையை இடைமறிக்கும் அளவுக்கு வேகமாகவோ அல்லது மேம்பட்டதாகவோ இல்லை. இது சூப்பர்சோனிக் வேகத்தில் பயணிப்பதால், இது மிகக் குறைந்த எதிர்வினை நேரத்தை மட்டுமே பாகிஸ்தான் ராணுவத்திற்கு அளிக்கிறது.

குறைந்த விமானப் பாதை

பிரம்மோஸ் தரை அல்லது கடலுக்கு அருகில் பறக்கிறது. அதனால் ரேடாரில் கண்டறிவது கடினம். அதைக் கண்டுபிடிக்கும் நேரத்திற்கு முன்பே இந்த ஏவுகணை இலக்கை தாக்கி விடும்.

பல முனை தாக்குதல்

நிலம், கடல் அல்லது ஆகாயத்தில் இருந்து ஏவ முடியும் என்பதால், இந்த ஏவுகணை எங்கிருந்து வரும் என்பதை பாகிஸ்தானால் எளிதில் யூகிக்க முடியாது. இது முன்கூட்டியே சரியான பாதுகாப்பு அரணை உருவாகுவதை கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்குகிறது.

அதிக துல்லியம் மற்றும் சேதம்

ஒரு பிரம்மோஸ் ஏவுகணை மூலம் தாக்கப்பட்டாலும், அது ராணுவ இலக்குகள் அல்லது கப்பல்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும். குறைந்த எண்ணிக்கையிலான பிரம்மோஸ் ஏவுகணைகள் மொத்தமாக ஒரு போரின் முடிவை மாற்றும் திறன் கொண்டது.

பாகிஸ்தானிடம் சமமான ஆயுதம் இல்லை

பிரம்மோஸ் போன்ற வேகமான அல்லது மேம்பட்ட ஏவுகணை அமைப்பு பாகிஸ்தானிடம் தற்போது இல்லை. அதன் பெரும்பாலான அமைப்புகள் மெதுவாகவே உள்ளது .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+