தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 18 பேர் மரணம்.. 20 வயது இளம் பெண் இறப்பால் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுகாதாரத்துறை ஜுன் 7ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 118 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. அந்த 18 பேரில் 15 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் தமிழகத்தில் 18 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளது.

இந்த 269ல் 212 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். செங்கல்பட்டில் 15 பேர், திருவள்ளூரில் 12 பேர், காஞ்சிபுரத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 243 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தமிழக கொரோனா மரணம்

தமிழக கொரோனா மரணம்

தமிழகத்தின் பிற பகுதியில் மொத்தமே இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். எல்லா ஊர்களிலும் ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 269 பேரில் பலர் 40 வயதை கடந்தவர்கள் ஆவர். குறிப்பாக உயிரிழந்தவர்களில் பலர் 50 முதல் 60 வயதை கடந்தவர்கள் ஆவர். அவர்களில் பலருக்கு உடலில் ஏற்கனவே நோய் தொற்று இருந்திருக்கிறது. இந்த நோய் தொற்றுடன் கொரோனாவும் சேர்ந்ததால் மாரடைப்பு, சிறுநீரக செயல் இழப்பு, சுவாச பிரச்சனை ஏற்பட்டு பலர் இறக்கிறார்கள்.

சென்னையில் 15 பேர் பலி

சென்னையில் 15 பேர் பலி

ஜுன் 7ம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 18 பேர் கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்திருப்பதாகவும், இதன் மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 15 பேர் இறந்துள்ளார்கள்.

இளம் பெண் உயிரிழப்பு

இளம் பெண் உயிரிழப்பு

தமிழகத்தில் சென்னையை தவிர இன்று செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மே 31ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது பெண், கொரோனாவின் கடுமையான பாதிப்பால் 6ம் தேதி உயிரிழந்தார். இவருடைய இறப்புக்கு தீவிரமான கொரோனா, அதனால் ஏற்பட்ட கடுமையான சிறுநீரக செயல் இழப்பு, கார்டியோஸ்பிரேட்டரி அரஸ்ட் / கடுமையான ப்ரீக்ளாம்ப்சியா / கோவிட் 19 ஆகியவை காரணம் என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது.

கொரோனா தீவிரத்தால் பலி

கொரோனா தீவிரத்தால் பலி

சென்னையில் 73 வயது முதியர், 87வயது மூதாட்டி, 51 வயது பெண், 74வயது மூதாட்டி, 69வயது மூதாட்டி, 71வயது முதியவர், 70 வயது மூதாட்டி, 72 வயது முதியவர், 58வயது முதியவர், 55 வயது முதியவர், 65 வயது முதியவர், 72 வயது முதியவர், 44 வயது ஆண், 49 வயது ஆண், 50 வயது ஆண் ஆகிய 15 பேர் 6ம் தேதி காலை நிலவரப்படி உயிரிழந்துள்ளனர். இதுதவிர திருவள்ளூரில் 61 வயது மூதாட்டி, செங்கல்பட்டில் 63 வயது மூதாட்டியும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த வயதான அனைவருக்குமே உடல் பாதைகள் இருந்தாலும் கொரோனாவின் தீவிர தன்மையால் சுவாச பிரச்னை, சிறுநீரக செயல் இழப்பு , மாரடைப்பு போன்ற நிலைகளை எட்டி இறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+