கணவரின் கள்ள உறவு.. வேதனையில் மனைவி.. நடுவில் சிக்கி பலியான 20 நாள் சிசு!
குழந்தையை அடித்து கொன்ற தாய் கைது செய்யப்பட்டார்.
சென்னை: மத்தவங்க பண்ற தப்புக்கு எல்லாம் இந்த பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் பண்ணதோ தெரியவில்லை?
சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் சத்யராஜ். இவர் ஒரு கொத்தனார். இவரது மனைவி செலஸ்டின். இவருக்கு வயது 23. இவங்க ரெண்டு பேருமே லவ் மேரேஜ்தான். ஒன்றரை வயசில் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், திரும்பவும் 20 நாட்களுக்கு முன்பு மற்றொரு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி செலஸ்டின், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடினார். "குழந்தைக்கு பால் கொடுத்தேன், பிறகு திடீரென வலிப்பு வந்து இறந்துவிட்டது" என்று கதறினார்.

புரை ஏறிவிடும்
இதனால் குழந்தையை செக் செய்த டாக்டர்களும், ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மூச்சுத் திணறியே குழந்தை இறந்திருக்கிறது என்றும் கூறினர். பொதுவாக தாய்பால் கொடுக்கும்போது குழந்தைகளுக்கு புரை ஏறிவிடுவதுண்டு. அந்த மாதிரி நேரங்களில் குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு விடும். எனவே பச்சிளம் குழந்தை இறந்து விட்ட சம்பவத்தை கேட்டு சென்னைவாசிகள் மனம் வருந்தி போனார்கள்.

மண்டையில் காயம்
ஆனால் இது சம்பந்தமாக ஒரு பக்கம் போலீசார் விசாரணையை நடத்தி வந்து கொண்டிருந்தார்கள். நேற்றுதான் குழந்தையின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் வந்திருக்கிறது. அதில், குழந்தையின் பின் மண்டையில் பலத்த காயம் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக விசாரணையை செலஸ்டினிடம் தொடங்கினார்கள்.

நேரில் பார்த்தார்
ஆரம்பமே உளறலாகிவிட்டது. போலீசார் ஒன்று கேட்டால் செல்ஸ்டின் ஒன்று சொல்கிறார். பிறகு தங்கள் பாணியில் போலீசார் இறங்கி விசாரித்தார்கள். அப்போதுதான் உண்மை வெளியே வந்தது. புருஷனுக்கு ஜெயந்தி என்ற பெண்ணுடன் கள்ள உறவு இருந்திருக்கிறது. 2 பேரும் ஜாலியாக இருந்ததை செலஸ்டின் ஒருநாள் நேரிலேயே பார்த்துவிட்டார்.

அடுத்தடுத்து 3 ஷாக்
இதனால் கடுமையான அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி சத்யராஜிடம் பெரிய அளவிலான தகராறில் ஈடுபட்டார். அப்போது சத்யராஜ், "அந்த பெண்ணை உனக்கு முன்னாடியே நான் கல்யாணம் பண்ணி இருக்கேன்" என்று சத்யராஜ் செலஸ்டினுக்கு அடுத்த ஷாக் கொடுத்தார். இதை தவிர அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறதாம். இது 3-வது ஷாக்.

தரையில் ஓங்கி அடித்தார்
இப்படிதான் பிரச்சனை ஆரம்பித்துள்ளது. 2 மனைவிகள், 3 பெண் குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது என்பது பற்றிதான் சம்பவத்தன்றும் இதை வைத்துதான் சண்டை வந்திருக்கிறது. அப்போதுதான் ஆத்திரம் தாங்காமல் செலஸ்டின் பெற்ற குழந்தையின் காலை பிடித்து தூக்கி தரையில் ஓங்கி அடித்துள்ளார். அதில்தான் குழந்தை இறந்துள்ளது. மூச்சுத் திணறல் என்று பொய் சொல்லி ஏமாற்றியது வெட்ட வெளிச்சமானது. இதையடுத்து போலீசார் செலஸ்டினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பச்சிளம் குழந்தைகள்
பெண்கள் கள்ளக்காதலில் தாங்கள் ஈடுபட்டால் அதற்கு இடையூறாக குழந்தைகள் இருப்பதாக கருதி கொலை செய்கிறார்கள். புருஷன் கள்ளக்காதலில் ஈடுபட்டாலும் பெண்கள் தங்கள் குழந்தைகளைதான் கொலை செய்கிறார்கள். பண்ற தப்பையெல்லாம் இவர்கள் மீது வைத்துக் கொண்டு அந்த ஆத்திரத்தை ஏதுமறியாத சிசுக்கள் மேல காட்டுவது என்ன நியாயம்?
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம்












Click it and Unblock the Notifications