யோவ்.. நான்தான் வர்ரேன்னு சொல்றேன் இல்லே.. இரு.. அடேங்கப்பா.. என்னா தில்லு இந்த சந்தியாவுக்கு!
பைக் திருடிய இளம்பெண் பொதுமக்களிடம் வாக்குவாதம் செய்கிறார்
Recommended Video
சென்னை: "யோவ்.. நான்தான் வர்ரேன்னு சொல்றேன் இல்லே.. நான் திருடல.. என்னை ஸ்டேஷன் கூட்டிட்டு போ..அங்க போய் பார்த்துக்கலாம்" என்று 19 வயது சந்தியா தில்லாக பேசும் வீடியோ வெளியாகி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வசிப்பவர் யாசர் அராபத். இவர் தன் வீட்டு வாசலில் எப்போதும் தன் பைக்கை நிறுத்தி வைப்பார். நேற்று முன்தினம் இரவும் அப்படித்தான் பைக் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் வந்து சாப்பிட்டார்.. பிறகு எதேச்சையாக வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை பார்த்து கொண்டிருந்தார்.
அப்போது 2 பெண்கள் தன் பைக் பக்கத்தில் நிற்பது தெரிந்தது.. பிறகு கள்ளசாவி போட்டு பைக்கை திருடி கொண்டும் முயன்றனர்.. இதனால் பதறியடித்து கொண்டு வெளியே வந்தார்.. அதற்குள் பெண்கள் தப்பி ஓட முயன்றனர்.

புகார்
இதில் பொதுமக்கள் உதவியுடன் விரட்டி சென்று ஒருவரை பிடித்துவிட்டார்.. இன்னொருவரை பிடிக்க முடியவில்லை.. இதையடுத்து அந்த பெண்ணை திருவல்லிக்கேணி போலீசில் ஒப்படைத்து புகார் தந்தார். அதன்பேரில் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சம்பந்தப்பட்ட பெண்கள் திருவல்லிக்கேணி ஜாம்பஜார் பகுதியை சேர்ந்தவர்கள்.. சிக்கிய பெண்ணின் பெயர் சந்தியா, வயசு 19, இன்னொரு பெண்ணின் பெயர் மோனிஷா.. 20 வயதாகிறது.. இவர் தப்பி ஓடிவிட்டாராம்..

மோனிஷா
போலீசாரிடம் 19 வயது சந்தியா சொல்லும்போது, "நாங்க 2 பேரும் ஃபிரண்ட்ஸ்.. ஜாம்பஜார் போலீஸ் ஸ்டேஷனில் பூ விற்று வந்தோம்.. அப்போது கஞ்சா விற்றோம்.. எங்களுக்கும் போதை பழக்கம் இருக்கு.. நியூ இயர் வந்துவிட்டது.. செலவுக்கு பணம் இல்லை..மோனிஷா சொன்னதால்தானே பைக்கைத் திருட வந்தேன்" என்றார். இப்போது மோனிஷாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

பைக் திருட்டு
இதனிடையே, சந்தியாவை விரட்டிக் கொண்டு, ஒரு வீட்டின் கேட் அருகில் சுற்றி வளைத்து பிடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.. அதில் பொதுமக்களிடம் அசராமல் சந்தியா பேசுகிறார்.."எதுக்கு பைக் திருடியே" என்ற பொதுமக்கள் கேட்க.. "நான் எங்கே திருடினேன்.. இல்லையே.. நான் திருடல' என்று சந்தியா சொல்கிறார்.

திருடல.. திருடல..
"நாங்கதான் நீ திருடினது பார்த்தோமே.. கேமிராவுல பார்த்துட்டுதான் பிடிக்க துரத்திட்டு வந்தோம்" என்று சொல்லவும், "யோவ்.. நான்தான் திருடலேன்னு சொல்றேனே.. சரி.. என்னை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போ.. அங்க போய் பார்த்துக்கலாம்" என்று தில்லாக பேசுகிறார்.

வீடியோ
இந்த வீடியோ வெளியாகி பொதுமக்களுக்கு மேலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. ஸ்டேஷனிலும் "நான் திருடல.. திருடல" என்றுதான் சந்தியா சொல்லி உள்ளார்.. பிறகுதான் நம் போலீசார் வேறு மாதிரியான விசாரிக்கவும் உண்மையை கக்கி உள்ளார்!
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications