வேலி தாண்டும் "வெள்ளாடுகள்".. ஸ்ட்டிராங் லீடராகும் ஸ்டாலின்.. டபுள் பிளானில் திமுக.. 10 சீட் தானாமே..?
எம்பி தேர்தலுக்கு 2 விதமான வியூகங்களை திமுக கையில் எடுக்க போகிறதாம்
சென்னை: எம்பி தேர்தலுக்கு திமுக, ஜரூராக ரெடியாகி கொண்டிருக்கிறது.. அந்த வகையில் 2 உறுதிப்படுத்தப்படாத செய்திகள் களத்தில் சுற்ற ஆரம்பித்துள்ளன.
10 வருடம் கழித்து ஆட்சியை பிடித்ததில் இருந்தே, தன்மீதான கவனத்தை நாட்டு மக்களிடம் குவித்து வருகிறது திமுக அரசு.. மற்றொருபக்கம், வரப்போகும் எம்பி தேர்தலுக்கும் தன்னை தயார் செய்து வருகிறது.
குறிப்பாக, பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒன்று திரண்டு வருவதில், முக்கியத்துவத்தை அளித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.. மம்தா, சந்திரசேகரராவ், பினராய், உத்தவ்தாக்கரே, நிதிஷ்குமார், என பெருந்தலைகள், பாஜகவுக்கு எதிரான மெகா கூட்டணியில் இறங்கி உள்ளனர்..

தகரும் கணிப்பு
இதில் மம்தாவின் நிலைப்பாடு உறுதியாக தற்போது தெரியவில்லை என்றாலும், பாஜகவை எதிர்ப்பதில் என்பதில், திமுகவின் உறுதி டெல்லியை கவனிக்க வைத்து வருகிறது.. அதுமட்டுமல்ல, ஸ்டாலின் பிரதமராக இருந்தால் நாடு செழிக்கும் என்று அகில இந்திய தலைவர்கள் அனைவரும் எண்ணத்தொடங்கிவிட்டதாக திமுக தொண்டர்களிடம் ஒரு பேச்சு வட்டமடித்து கொண்டே இருக்கிறது.. எனினும், ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்பதை பலமுறை வெளிப்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.. "ராகுல் காந்தியே வருக.. நாட்டுக்கு நல்லாட்சி தர உமது புரட்சிப் பயணம் வெல்க" என்று திமுக நாளேடான முரசொலியில் பதிவாகி இருந்ததும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.

கிங் மேக்கர்
கடந்த வாரம் திமுக எம்பி ஆ.ராசா, நம் ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அந்த பேட்டியில், "எல்லாருக்குமே பிரதமர் ஆக வேண்டும் என்று ஆசை இருக்கத்தான் செய்யும்.. ஆனாலும் யாராவது ஒருத்தரை தேர்ந்தெடுப்பதற்காக முன்னிலைப்படுத்த வேண்டும்.. அந்த "பந்து" யார் கிட்ட வரும் என்றால், அப்படி ஒரு ஆசையே இல்லாதவர் கிட்டதான் வந்து சேரும்.. 40 எம்பிக்களை கையில் வைத்துக் கொண்டு, அந்த ஆசையே இல்லாத ஒருவரை மறுதலித்துவிட்டு, எப்படி பிரதமரை மற்றவர்கள் தீர்மானிப்பார்கள்? அதனால், எல்லாருமே ஸ்டாலினிடம்தான் வருவாங்க.. பார்த்துக்கிட்டே இருங்க.. டெல்லியை பொறுத்தவரை ஸ்டாலின்தான் 'கிங்மேக்கர்'.. நம் மாநிலத்திலோ அவர்தான் "கிங்" என்று பெருத்த நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

வேல்யூ பாயிண்ட்ஸ்
பிரதமர் வேட்பாளர் பதவி குறித்த முணுமுணுப்புகள் இவ்வாறு வட்டமடித்து வரும் நிலையில், துணை பிரதமர் என்ற ஒரு சமாச்சாரமும் தற்போது வெடித்து கிளம்பி உள்ளதாம். அதாவது, 2019 தேர்தலில் திமுக எதிர்க்கட்சியாக இருந்ததால், 20 தொகுதிகளை தன் வசம் வைத்துக் கொண்டு, புதுச்சேரி உட்பட மீதி 20 தொகுதிகளையும் ஒதுக்கியிருந்தது.. அந்த நேரத்தில் மத்திய பாஜக மீதான வெறுப்பு காரணமாக, அதிமுக கூட்டணிக்கு அவ்வளவாக ஆதரவு கிடைக்காத நிலையில், திமுக அமோக வெற்றி பெற்றது.. பிறகு தமிழகத்திலும் ஆட்சியையும் பிடித்து, தேசிய அளவில் தன்மீதான கவனத்தை அக்கட்சி குவித்து கொண்டு வருகிறது..

காய் நகர்த்தல்
இதனால், திமுகவின் கிராப், ஏறிக்கொண்டே செல்லும்நிலையில் அக்கட்சியின் திட்டமிடல்களும் அதற்கேற்றவாறு துரிதமாகி உள்ளன.. அதன்படி, வரக்கூடிய எம்பி தேர்தலில் 30 தொகுதிகளையாவது தன் கையில் வைத்துக் கொண்டு, மற்ற 10 தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்க யோசித்து வருகிறதாம் திமுக.. இதற்கு 2 விதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.. ஒன்று, பாஜகவை எதிர்க்கக்கூடிய அணியில் உள்ள காங்கிரஸ் கட்சி பலவீனமாக உள்ள நிலையில், 3வது அணியும் உருவாக வாய்ப்பு உள்ளதாகவே தெரிகிறது..

ப்ளான் 1
இதற்கான காய் நகர்த்தல்களைதான், பாஜக அல்லாத மாநிலங்களில் தலைவர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.. அந்தவகையில், ஒருவேளை 3வது அணி உருவாகிவிட்டால், தங்கள் கையில் அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களை வைத்திருப்பது நல்லது என்று திமுக நினைக்கிறதாம்.. இதன்மூலமாக, "துணை பிரதமர்" உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் பெறலாம் என்று கணக்கு போடுகிறது.. இப்போதைக்கு அதிமுகவைவிட பலம்வாய்ந்த கூட்டணியாக திமுக இருக்கிறது என்றாலும், 3வது அணி அமைய நேர்ந்தால், அதற்கு பிறகு கூட்டணி கணிப்பு எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாது.

ப்ளான் 2
அதனால்தான், தன் தரப்பை இன்னும் ஸ்டிராங்காக வைத்து கொள்ள திமுக முனைப்பு காட்டுகிறதாம்.. இதற்காக மாற்று கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை தங்கள் பக்கம் கொண்டு வரும் வியூகத்தையும் கையில் எடுப்பதாக தெரிகிறது.. அதற்கேற்றபடி, வழக்கு, ரெய்டுகளில் சிக்கி உள்ள, இனி சிக்க போகிற அதிமுகவின் சில முன்னாள்கள், திமுகவில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.. இதற்காக தூது நடவடிக்கையிலும் இறங்கி உள்ளார்களாம்.. ஆனால், இவர்களை கட்சிக்குள் இணைத்து கொள்வது குறித்து திமுக மேலிடத்தில் தொடர்ந்து தயக்கங்கள் காட்டப்பட்டு வருவதாக தெரிகிறது.

டாப் லீடர்கள்
இப்போது, இவர்களை திமுகவில் இணைத்துக் கொள்ளும்படி, மேலிடத்துக்கு ஆலோசனைகளை, நலம்விரும்பிகள் சொல்லி வருகிறார்களாம்.. "தானாக வருபவர்களை ஏன் கை நழுவிவிடவேண்டும்.. அதிமுக கூட்டணி பலவீனமாகி உள்ள நிலையில், இவர்களை திமுகவில் இணைத்து கொள்வது நல்லது. இல்லாவிட்டால் இவர்கள் பாஜகவில் ஐக்கியமாகிவிடக்கூடும், இதனால் பாஜகவுக்குதான் பலம் கூடும், அது நமக்கு சிக்கலாகிவிடும்" என்று அறிவுறுத்தினார்களாம்.. இந்த அட்வைஸையும் கவனத்தில் கொண்டு சீரியஸாக யோசித்து வருகிறதாம் திமுக.. என்னதான் நடக்க போகிறது? பார்ப்போம்..!!












Click it and Unblock the Notifications