தமிழ்நாட்டை நெருங்கிய புயல்.. இந்த 2 விஷயம்தான் புதிராகவே இருக்கிறது.. ஆட்டம் காட்டும் "மாண்டஸ்"!
சென்னை: வங்கக்கடலில் உருவாகி இருக்கும் மாண்டஸ் தொடர்பாக இரண்டு கேள்விகள் எழுந்துள்ளன. இந்த புயலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, வானிலை அறிக்கைகளும் மாற்றப்பட்டு உள்ளன.
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த புயல் தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது.
இந்த புயல் காரணமாக இன்று தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும் புதுக்கோட்டை, காரைக்கால் பகுதிகளில் மிகவும் பலத்த மழை பெய்யலாம் என வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுச்சேரியில் இன்று பலத்த மழை கொட்டி தீர்க்கலாம் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல்
முதலில் இருந்தே இந்த புயல் கொஞ்சம் வானிலை வல்லுனர்களை குழப்பத்தான் செய்தது. அதன்படி சீன கடல் பகுதியில் இருந்து அந்தமான் பக்கம் இந்த தாழ்வு பகுதி வருவதே சந்தேகமாக இருந்தது. இந்த தாழ்வு பகுதி முழுமையாக அந்தமான் பகுதிக்கு வந்து அதன்பின் வலிமை அடையுமா என்ற கேள்வி இருந்தது. கடைசியில் 3 நாட்களுக்கு முன் இந்த தாழ்வு பகுதி ஒருவழியாக அந்தமான் கடல் பகுதிக்கு வந்து பின்னர் தாழ்வு மண்டலமாக மாறியது. அதன்பின் இது புயலாக மாறுவது உறுதியானது.

வானிலை
ஆனால் புயலாக மாறியபின் இது எங்கே கரையை கடக்கும் என்ற கேள்வி எழுந்தது. முதலில் வடக்கு ஆந்திராவில் கரையை கடக்கலாம் என்று கூறப்பட்டது. அதன்பின் டெல்டா மாவட்டங்களை நோக்கி வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. பின்னர் நேற்று வெளியான அறிக்கையில் சென்னை ஆந்திரா இடையே கரையை கடக்கலாம், ஸ்ரீஹரிகோட்டா அருகே இது கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியது. கடைசியாக வெளியான அறிக்கையில் இது மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

வானிலை மாற்றம்
அதேபோல் இந்த புயல் தீவிர புயலாக மாறாது என்றும் தொடக்கத்தில் கூறப்பட்டது. காற்று வெட்டு காரணமாக புயல் வலிமை அடையாமல் போகலாம். அதேபோல் வறண்ட காற்று காரணமாகவும் புயல் வலிமை அடையாமல் போகலாம் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக புயல் தீவிர புயலாக மாறுமா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில்தான் மாண்டஸ் தீவிர புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. காரைக்காலில் இருந்து 420 கிமீ தொலைவில் இந்த புயல் மையம் கொண்டு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

2 கேள்விகள்
இந்த புயல் தொடர்பாக இரண்டு விஷயங்கள் இன்னும் குழப்பமாக உள்ளது. முதல் விஷயம் புயல் எப்போது கரையை கடக்கும் என்பது. புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று முதலில் வானிலை மையம் தெரிவித்தது. ஆனால் தற்போது நிலவரங்களின்படி புயல் நாளை இரவுக்கு மேல் கரையை கடக்கலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரம் தொடர்பாக இன்னும் முழுமையான கணிப்புகள் வெளியாகவில்லை. அதேபோல் புயல் கரையை கடக்கும் போது தீவிர புயலாகஇருக்குமா , புயலாக இருக்குமா, ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக இருக்குமா என்பதும் கேள்வியாக உள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications