தமிழ்நாட்டில் மட்டும்தான் சாத்தியம்.. +2 தேர்வு முடிவில் நடந்த நெகிழ்ச்சி.. சத்தமின்றி பெரிய புரட்சி
சென்னை: சமீபத்தில் வெளியான 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சத்தமின்றி பெரிய புரட்சி ஒன்று நடந்து உள்ளது. கல்வி என்று வந்துவிட்டாலே தமிழ்நாட்டை அடித்துக்கொள்ள முடியாது என்பதற்கு சான்றாக இந்த சம்பவம் நடந்து உள்ளது.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. இதற்கான முடிவுகள் கடந்த 8ம் தேதி வெளியானது. இந்த முறை தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர் . இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்.. மாணவியர்கள் 4.54 லட்சம் மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் . மாணவர்கள் 3.57 லட்சம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

மாணவிகள் தேர்ச்சி விகிதம் - 96.70% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விகிதம் - 93.16% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சத்தமின்றி புரட்சி
தமிழ்நாட்டில் +2 பொதுத் தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96%-ஐ எட்டி புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 96%-ஐ எட்டி புதிய சாதனை படைத்துள்ளது - தமிழ்நாடு அரசு
2021-22 கல்வியாண்டில் ஆண்டில் 84% ஆக இருந்த | தேர்ச்சி சதவீதம், 2024-25ல் 96% ஆக உயர்வு. அதேபோல், |10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2021-22ல், 78% ஆக இருந்த | தேர்ச்சி சதவீதம், 2023-24ல் 92% ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. நாளை வெளியாகும் முடிவுகளில் இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு நேரடியாக சென்று மாணவர்களை ஊக்கப்படுத்துவது, மாணவர்களை பள்ளிக்கு கொண்டு வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த தேர்ச்சி விகிதம் புதிய உச்சம் தொட்டுள்ளது.
தேர்ச்சி விவரங்கள்
தேர்வு எழுதியவர்கள் 7.92 லட்சம் பேர்
இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 7.53 லட்சம் பேர்
மாணவியர்கள் 4.54 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாணவர்கள் 3.57 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்
மாணவர்களை விட 3.54 சதவிகிதம் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரியலூர் மாவட்டம் 98.82 சதவிகிதம் பெற்று முதலிடம்
ஈரோடு மாவட்டம் 97.98 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடம்
திருப்பூர் மாவட்டம் 97.53 சதவிகிதம் பெற்று மூன்றாம் இடம்
கோவை மாவட்டம் 97.48 சதவிகிதம் பெற்று நான்காம் இடம்
குமரி மாவட்டம் 97.01 சதவிகிதம் பெற்று ஐந்தாம் இடம்
இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணை தேர்வு நடக்க உள்ளது. தேர்வை 10 ஆயிரம் எழுதவில்லை. அவர்களுக்கும் துணை தேர்வு நடக்க உள்ளது.
தேர்வு எழுதாதவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அவர்கள் நேரில் சந்தித்து தேர்வு எழுத வைக்கப்படுவார்கள். ப்ளீஸ்.. உங்ககிட்ட தயவு செஞ்சு கேட்குறேன்.. துணை தேர்வு எழுதுங்கள் . துணை தேர்வை எழுதினால் இந்த வருடமே நீங்கள் கல்லூரிக்கு போகலாம் என்றும் அரசு சார்பாக வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications