"மாட்டிக்கிச்சாமே" 5 திமிங்கலம்.. கடைசி அஸ்திரத்தை வீசும் பாஜக.. "லாபக்கணக்கு" திமுகவிலா? பாஜகவிலா?
சென்னை: ஒருங்கிணைந்த அதிமுக என்ற விஷயத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காத பட்சத்தில், அதிமுகவில் மேலும் பிளவு ஏற்படும் சூழல் உருவாகலாம் என்கிறார்கள்..
பாஜக எதிர்ப்பு என்ற விஷயத்தை எடப்பாடி பழனிசாமி எந்த அளவுக்கு மேலிடத்தை சமாளிப்பார் என்பதுதான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது. காரணம், எடப்பாடி குறித்து நெகட்டிவ் ரிப்போர்ட்கள் மேலிடத்துக்கு பறந்து கொண்டே இருக்கிறதாம்.
ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி ஒத்துழைக்காத பட்சத்தில், அவரை கழட்டிவிட்டு, 3வது அணி அமைக்கவும் பாஜக, தயாராகிவிடும் என்ற பேச்சு உள்ள நிலையில், அவரை பற்றி டெல்லிக்கு சென்று கொண்டிருக்கும் தகவல்களால், அதிருப்திகள் மேலும் கூடபோகிறது என்கிறார்கள்.

கேம் சேலஞ்ச்
எடப்பாடி பழனிசாமி நாமக்கல் கூட்டத்தில் மெகா கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.. ஆனால், அதில் பாஜக இடம்பெறாது என்று எடப்பாடி சொல்லவேயில்லை.. அந்தவகையில், பாஜகவும் அவர் தலைமையிலான கூட்டணியில் இடம்பெறும் என்பதாகவே பொருள்பட பேசினார் என்கிறது ஒரு தரப்பு.. வழக்கமாக எந்த தேர்தல் என்றாலும், பாஜக தலைமையில்தான் கூட்டணி முடிவாகும் என்ற எழுதப்படாத நியதி நடைமுறையில் உள்ள நிலையில், தங்களை கேட்காமல், மெகா கூட்டணியை எடப்பாடி அறிவித்துவிட்டாரே, அப்படியானால் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடப்பாடி எடுக்கிறாரா? என்று கேள்வி எழுப்புகிறது இன்னொரு தரப்பு.

குறி 1
இதற்கு நடுவில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சில வேலைகளை ஓபிஎஸ் தரப்பில் முன்னெடுத்து வருவதாக சொல்கிறார்கள்.. குறிப்பாக, மத்திய பாஜகவின் செயல்பாடுகளுக்கு எடப்பாடி பழனிசாமியின் ரியாக்ஷன்கள், அதுகுறித்த பேட்டிகள் முதல் அமித்ஷாவை சந்திப்பது குறித்து எடப்பாடியின் கருத்துக்கள் வரை அத்தனையையும் டெல்லிக்கு பாஸ் செய்து வருகிறார்களாம்.. அந்தவகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, எடப்பாடி பழனிசாமி, ராகுல்காந்தியுடன் போனில் பேசியதாக ஒரு தகவல் வலம் வந்தது.. அந்த தகவலையும் டெல்லிக்கு அனுப்பி வைத்ததாம்.

குறி 2
அதுமட்டுமல்ல, கடந்த முறை தேர்தல் ஆலோசகராக இருந்த சுனிலை வைத்துக்கொண்டு, காங்கிரசுடன் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேரம் பேசுகிறது என்ற கூடுதல் தகவலும் பறந்துள்ளது... ஏற்கனவே, ஓபிஎஸ்ஸை இணைத்து கொள்ளாததால், மேலிட தலைவர்கள் எடப்பாடி மீது கடுப்பில் உள்ள நிலையில், அடுத்தடுத்த புகார்களும் ஒன்றுசேர்ந்துள்ளதால், கூடுதல் அப்செட்டை அவர்களுக்கு ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான் 2 முக்கியமான விஷயங்கள் கசிந்துள்ளன. 2 விதிமான முடிவுகளை பாஜக தலைவர்கள் எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.

சாயும் தலை
முதலாவதாக, அதிமுகவின் வாங்கு வங்கி என்பது பாஜகவுக்கு மிக மிக முக்கியமானது.. ஆனால், எம்பி தேர்தலை பற்றி எடப்பா பழனிசாமி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்கிறார்கள்.. அதாவது தோற்றாலும் பரவாயில்லை, வரப்போகும் சட்டமன்ற தேர்தல்தான் மிக முக்கியமானது என்று நினைக்கிறாராம்.. அதனால்தான், பாஜகவின் வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவில்லை என்கிறார்கள்.. எனினும், ஒருங்கிணைந்த அதிமுகவை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.. அப்படி ஒருங்கிணைந்த அதிமுக என்றால் மட்டும் இரட்டை இலையை ஒதுக்க வேண்டும்.. இல்லாமல், முடக்கிவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு பாஜக வரக்கூடுமாம்.

வெள்ளைக்கொடி
இரண்டாவதாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது தரப்புக்கான நெருக்கடிகளை அதிகப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. ஏற்கனவே, ஏகப்பட்ட வழக்கு, பிரச்சனைகளில் எடப்பாடி தரப்பினர் வசமாக சிக்க உள்ள நிலையில், வருமானவரி, சிபிஐ போன்றவைகளை வைத்து, மேலும், செக் வைக்கவும் நிறைய வாய்ப்புள்ளதாம்.. இதனால், எடப்பாடி தரப்பில் உள்ள முக்கிய புள்ளிகள் அதிர்ந்து போயுள்ளார்களாம்.. இந்த வழக்கு நெருக்கடிகளில் இருந்து தப்பித்து கொள்ள, இதில் ஒருசிலர், பாஜகவுக்கு "வெள்ளை கொடி"யை காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்..

5 தூண்டில்
அப்படி யாராவது, தங்களை நாடி வர நேர்ந்தால், அவர்களை தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளவும் பாஜக முனைப்பு காட்டி வருகிறதாம்.. எப்படியாவது இந்த தேர்தலில், 10 தாமரைகளுடன் டெல்லிக்கு சென்றுவிட வேண்டும் என்ற வைராக்கியதில் பாஜக உள்ளதால், எடப்பாடி அதற்கு முழு ஒத்துழைப்பை தராத பட்சத்தில், எடப்பாடி டீமுக்குள்ளேயே 5 பேருக்கு தூண்டிலை வீசியுள்ளதாம். சுருக்கமாக சொல்லப்போனால், எடப்பாடி அணிக்குள்ளேயே இன்னொரு பிளவு வரலாம் என்கிறார்கள்.. எனவே, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி இணங்கி வர வேண்டும், அதுதான் ரத்தத்தின் ரத்தங்களுக்கு நிம்மதி உணர்வை தரும் என்கிறார்கள்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications