நீட் மறு தேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தொடர்ந்த அப்பீல் வழக்கு.. சென்னை ஹைகோர்ட் போட்ட உத்தரவு
சென்னை: நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக்கூறிய சென்னை உயர் நீதிமன்றம் 16 மாணவர்கள் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மே 4 ஆம் தேதி நடத்தப்பட்டது. நீட் தேர்வு நடந்த நாளில் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே.கே.நகர் பத்ம ஷேசாச்திரி 1 மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஜோதி ராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனு மீதான விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை தரப்பில் வைத்த வாதத்தில், " வழக்கு தொடர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர் 100 கேள்விகளுக்கு மேல் விடை அளித்து இருந்தனர்.
மின் தடையால் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்திவைத்து இருந்தது. இந்த நிலையில்தான், இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்கப்படும் வரை மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது. மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது!












Click it and Unblock the Notifications