Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஸ்வர்யா வீட்டில் நகைகள் கொள்ளை.. வழக்கில் புதிய ட்விஸ்ட்.. 2-வதாக அளித்த புகாரில் பரபர தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 பவுன் நகைகளை காணவில்லை என முதலில் புகார் அளித்து இருந்தார். ஆனால் வீட்டு வேலைக்கார பெண்ணிடம் மீட்கப்பட்ட நகைகள் அதைவிட கூடுதலாக இருந்ததால் முழுமையாக ஆய்வு செய்து புகார் அளிக்குமாறு கேட்டு இருந்தனர். அதன்பிறகு ஐஸ்வர்யா 2-வதாக புதிய புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், மொத்தமாக 200 பவுன் நகை கொள்ளை போனதாக குறிப்பிட்டு இருந்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அப்போது ஐஸ்வர்யாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பல கோடி மதிப்புள்ள நகைகளை சீர் வரிசையாக கொடுத்தார். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற குழந்தைகள் உள்ளனர்.

நகைகள் மாயம் என புகார்

நகைகள் மாயம் என புகார்

கருத்து வேறுபாடு காரணமாக தனுஷ் ஐஸ்வர்யா பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஐஸ்வர்யா தனது வீட்டின் லாக்கரை திறந்து பார்த்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஐஸ்வர்யாவின் பாரம்பரிய நகைகள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தேனாம்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் சுமார் 60 பவுன் நகைகளை காணவில்லை என்று ஐஸ்வர்யா தெரிவித்து இருந்தார்.

ஈஸ்வரியின் வீட்டில் சோதனை

ஈஸ்வரியின் வீட்டில் சோதனை

இது தொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்து வந்த வேலைக்கார பெண் ஈஸ்வரி, கார் டிரைவர் வெங்கடேசன் ஆகிய இருவரும் சேர்ந்து நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினார். ஈஸ்வரியின் வீட்டில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி நகை கொள்ளை போனது தொடர்பாக பல்வேறு தகவல்களை திரட்ட தொடங்கினர்.

கூடுதல் நகைகள் பறிமுதல்

கூடுதல் நகைகள் பறிமுதல்

இதில் முதலில் 100 பவுன் நகைகள் கைப்பற்றப்பட்டது. ஐஸ்வர்யா தனது புகாரில் 60 பவுன் நகைகள் திருடு போயிருந்ததாக புகார் அளித்த நிலையில், கூடுதல் நகைகள் கைப்பற்றப்பட்டது போலீசாருக்கு சற்று அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதனால் விசாரணையை மேலும் போலீசார் தீவிரப்படுத்தினர். வேலைக்கார பெண்ணான ஈஸ்வரி, ஐஸ்வர்யா வீடுகளில் மட்டும் இன்றி ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகைகளை திருடி இருக்கக் கூடுமோ ? என்கிற சந்தேகம் எழுந்தது.

200 பவுன் நகைகள் கொள்ளை போனதாக

200 பவுன் நகைகள் கொள்ளை போனதாக

இதையடுத்து ஐஸ்வர்யாவை தொடர்பு கொண்ட போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து முழுமையாக கணக்கு பார்த்து கொடுக்குமாறு கேட்டனர். அதன்பிறகு ஐஸ்வர்யா 2-வதாக புதிய புகார் ஒன்றை அளித்து இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. இரண்டாவதாக அளித்த புகாரில், தனது வீட்டில் மொத்தமாக 200 பவுன் நகை கொள்ளை போனதாக ஐஸ்வர்யா குறிப்பிட்டு இருந்தார்.

 போலீஸ் அதிகாரி விளக்கம்

போலீஸ் அதிகாரி விளக்கம்

இந்த புகாரையடுத்து புதிய வழக்கை பதிவு செய்த போலீசார், ஈஸ்வரி, வெங்கடேசன் இருவரையும் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். இதில் 45 முதல் 50 பவுன் வரையிலான நகைகள் ஈஸ்வரியிடம் இருந்து கைப்பற்றப்பட்டு இருக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஐஸ்வர்யா வீட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.

ஐஸ்வர்யாவின் வீட்டில் மட்டும்

ஐஸ்வர்யாவின் வீட்டில் மட்டும்

அவரது வீட்டில் நகைகளை திருடிய வேலைக்கார பெண் ஈஸ்வரியிடம் முதல் புகாரில் கூறியதை விட கூடுதல் நகைகள் இருந்ததால் அது ரஜினிகாந்த் அல்லது தனுஷ் வீட்டில் திருடப்பட்டவையாக இருக்கலாம் என்று விசாரித்தோம். ஆனால் அப்படி எதுவும் இல்லை. ஐஸ்வர்யாவின் வீட்டில் மட்டுமே 200 பவுன் நகைகளை வேலைக்கார பெண் ஈஸ்வரியும் டிரைவர் வெங்கடேசனும் திருடியுள்ளனர். மொத்தம் 150 பவுன் நகைகள் கைப்பற்றியிருக்கிறோம். இன்னும் 50 பவுன் நகைகளை கைப்பற்ற வேண்டியுள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+