"நூல்" போட்டதால் நூலுக்கு விருதா".. மாலன் பற்றி தடதடத்த "தடா".. திரண்டு வந்த பதிலடி
சென்னை: 2021ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் பரிசுக்கு, மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மாலன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்... சிறந்த மொழிப்பெயர்ப்பாளருக்கான விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1955-ம் ஆண்டிலிருந்து சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது... இலக்கிய உலகில் இந்த விருதுக்கு தனி மரியாதையே உண்டு.
பல மொழிகளில் படைக்கப்பட்டுள்ள படைப்புகளில், சிறந்த நூல்களை தேர்ந்தெடுத்து இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

சாகித்ய அகாடமி
அந்த வகையில், சாகித்ய அகாடமி விருதுடன், சாகித்ய அகாடமி சார்பில் வருடந்தோறும், தனித்துவமான இளம் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதும் வழங்கப்படுகிறது... இதைதவிர, மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கான விருதும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகள் விவரம் டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது.

மாலன் - விருது
பல்வேறு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளில் வெளியான மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன... இதில், சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது தமிழின் மூத்த ஊடகவியலாளரும், எழுத்தாளருமான மாலனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சைரஸ் மிஸ்ட்ரி எழுதிய ' Chronicle of a Corpse Bearer' என்ற, ஆங்கில நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள்' நூலுக்காகத்தான் மாலனுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது..

பிணம் தூக்கும் பணி
அதாவது, பார்சி சமூகத்தில் பிணம் தூக்கும் பணிகளை செய்யும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பற்றி 'Chronicle of a Corpse Bearer' என்ற ஆங்கில நாவல் உருவாக்கப்பட்டது.. இதை எழுதியவர் பிரபல இந்திய நாடக ஆசிரியர் சைரஸ் மிஸ்திரி ஆவார்.. இந்த விருது அப்போதே பல விருதுகளை பெற்றது.. இதிலும், கடந்த 2015-ம் ஆண்டின் சிறந்த ஆங்கில இலக்கிய நூலுக்கான சாகித்ய அகாடமி பிரதான விருதையும் பெற்றுள்ளது.

சோஷியல் மீடியா
இதைதான், தற்போது மாலன் மொழிபெயர்த்துள்ளார்.. விருது பெற போகும் மாலனுக்கு, பலர் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.. எனினும், இந்த விருது வழங்கப்பட்டது குறித்து சோஷியல் மீடியாவில் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.. இதற்கு முக்கிய காரணம், மாலன் சாகித்ய அகாடமியின் தமிழ் ஆலோசனைக் குழு உறுப்பினராக 2018-ம் ஆண்டு முதல் இப்போது வரை இருந்து வருகிறார்.. இவருக்கு விருது வழங்கியதே, சர்ச்சைக்குரிய முடிவு என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பூணூல் - நூல்
இதனிடையே, இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹிம் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "எழுத்தாளர் மாலனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.. எதற்காக இந்த விருது? நூல் போட்டதால் நூலுக்கு விருதா ?" என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.. இதற்கு பலரும் திரண்டு வந்து பதிலடி தந்து வருகிறார்கள்.. இப்படியெல்லாம் பேசி, சாகித்ய அகாடமி விருதுகளை கேவலப்படுத்தக்கூடாது என்றும், இதுக்கும் பூணூலுக்கும் என்ன சம்பந்தம் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதையடுத்து, மாலனுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் விருது பற்றின சர்ச்சை ஓயவே இல்லை.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications