Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆயுதப் படை காவலர் தற்கொலை.. கடனால் சிக்கிய குடும்பம்.. இளம் காவலர்களின் மனிதாபிமானம்.. நெகிழ்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆயுதப்படையில் பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட காவலர் அருணின் குடும்பத்திற்கு அவருடன் பயிற்சி முடித்த காவலர்கள் எல்லாம் சேர்ந்து ரூ 7 லட்சத்தை நிதியுதவியாக அளித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆயுதபடையில் பணியாற்றி கொண்டிருந்த ஆயுதப்படை காவலர் அருண் கடந்த ஜூலை10 ஆம் தேதி சென்னை ஆயுதப் படையில் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். காவலர் அருண் விருதுநகர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கடும் முயற்சியால் காவலர் ஆனவர்.

2022 batch police trainers helped Armed forces constable family who committed suicide

அவரது உயர்வு அவரது குடும்பத்தில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருந்து வந்தது. கண், காது இயங்காத அவரது தாய் தந்தைக்கு காவலரின் பணி மிக பெரும் உதவியாக இருந்து வந்தது. இந்நிலையில் அவரது மரணம் காவலர் அருணின் குடும்பத்திற்கு பேரிடியாக அமைந்தது. கடன் சுமையால் அருணின் குடும்பத்தினர் மிகவும் கஷ்டப்பட்டு வந்தனர்.

2022 batch police trainers helped Armed forces constable family who committed suicide

இதனை அறிந்த அவருடன் தேர்வான காவலர்களான 2022 பேட்ச் காவலர்கள் அருணின் குடும்பம் நமது குடும்பம் . அந்த‌ குடும்பத்தை துன்பத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என கருதினர். வாட்ஸ் ஆப் குழு மூலமாக தமிழ்நாட்டில் உள்ள அவரது பேட்ச் காவலர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு காவலரும் தங்களால் முடிந்த பணத்தை அனுப்ப ஆரம்பித்தனர்.

2022 batch police trainers helped Armed forces constable family who committed suicide

இதுவே விஸ்வரூபம் எடுத்து ரூ. 7,13,452 (ஏழு இலட்சத்து பதிமூன்றாயிரத்து நானூற்று ஐம்பத்தி இரண்டு ரூபாய்) அருணின் குடும்பத்திற்கு அருண் பேட்ச் காவலர்கள் மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள்‌ பயிற்சி முடித்தே 7 மாதங்கள்தான் ஆகிறது. தமிழக காவல்துறை வரலாற்றில் இதுவரை இவ்வளவு குறைந்த பணிகாலத்தில் இவ்வளவு பெரிய தொகை உடன் பணியாற்றும் காவலர்களுக்கு கொடுக்கபட்டதில்லை என காவலர்கள் தெரிவிக்கின்றனர்.

2022 batch police trainers helped Armed forces constable family who committed suicide

இதற்கு முன்பு விபத்துக்குள்ளான மூன்று 2022 பேட்ச் காவலர்களுக்கும் இவர்கள் உதவியுள்ளனர் என்பது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. இவ்விஷயம் அறிந்த சமூகநல ஆர்வலர்கள் மற்றும் சீனீயர் காவலர்கள் 2022 பேட்ச் காவலர்களை பாரட்டிய வண்ணம்‌ உள்ளனர். அன்பு அஹிம்சையின் வம்சம், நட்பு நம்பிக்கையின் வம்சம் என்பதை நிரூபித்து காட்டிய 2022 பேட்ச் காவலர்களுக்கு எங்கள் சல்யூட் என தெரிவிக்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள். இந்த மனசுதான் சார் கடவுள்... இதுதான் நினைவுக்கு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+