2024 நாடாளுமன்றத் தேர்தல்! திமுகவிடம் மயிலாடுதுறை தொகுதியை எதிர்பார்க்கும் மனிதநேய மக்கள் கட்சி!
சென்னை: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 1 சீட்டாவது வாங்கிவிட வேண்டும் என தீவிரமாக முயற்சித்து வரும் மனிதநேய மக்கள் கட்சி, மயிலாடுதுறை தொகுதியை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழ்நாடு முழுவதும் ஓரளவு வலிமையான கட்டமைப்பு உள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற இஸ்லாமிய அமைப்புகளை காட்டிலும் மமகவும், தமுமுகவும் ஓரளவு ஆக்டிவாக இயங்கி வருவது அந்தக் கட்சியின் ப்ளஸ் பாயிண்டாக பார்க்கப்படுகிறது. இதேபோல் நகர, ஒன்றிய வாரியாகவும் அமைப்புகள் இக்கட்சிக்கு உள்ளன.

இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் பெருமளவில் தமுமுகவில் உள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு தொகுதியையாவது வாங்கிவிட வேண்டும் என முயற்சிக்கும் ஜவாஹிருல்லா அதற்கான காய் நகர்த்தலில் ஈடுபட ஆரம்பித்துள்ளார். வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் என ஐந்தாறு தொகுதிகளை பரிசீலித்ததில் மயிலாடுதுறை ஓரளவு சாதமகாக இருக்கும் என மமக தரப்பில் பரிசீலிக்கப்பட்டதாம்.
இன்னும் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றி இறுதி முடிவு எடுக்காத நிலையில், விரைவில் தொகுதியை தேர்வு செய்து திமுக தலைமையிடம் இது குறித்து வாஹிருல்லா தரப்பில் பேசப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 நாடளுமன்றத் தேர்தலின் போதே திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 1 சீட் கேட்டது. ஆனால் அப்போது கடை நேரத்தில் அணுகியதால் மமகவின் முயற்சி பலனளிக்கவில்லை.
அதனால் தான் இந்த தேர்தலின் போது இப்போதே பணிகளை தொடங்கிவிட்டார் ஜவாஹிருல்லா. இதனிடையே மயிலாடுதுறை தொகுதி மீது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு கண் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. மயிலாடுதுறை தொகுதியை பொறுத்தவரை திமுகவின் வாக்கு வங்கி பலமாக உள்ள ஒரு தொகுதியாகும். அதுமட்டுமல்ல சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமாக உள்ளன. இதனால் தேர்தலில் வெற்றி எளிதாகும் என்ற அரசியல் கணக்கும் உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications