என்னடா இது.. 11 பெண்களுடன் "முதலிரவு".. ஒவ்வொருவருக்கும் விதம் விதமாக டார்ச்சர்.. கொடூர மாப்பிள்ளை
11 திருமணங்கள் செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்
சென்னை: ஒருத்தருக்கு 11 பெண்களுடன் முதலிரவு நடந்திருக்கிறது.. ஒவ்வொரு பெண்ணையும் ஒவ்வொரு முதலிரவில் வித்தியாசமாக டார்ச்சர் செய்துள்ளார் மாப்பிள்ளை.. இந்த மாப்பிள்ளைக்கு வயசு வெறும் 22தான்..!
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கணேஷ்.. இவருக்கு லவ்லி கணேஷ் என்று இன்னொரு பெயரும் இருக்காம்.. 22 வயதாகிறது.. கொளத்தூரை சேர்ந்த ஒரு பெண்ணை லவ்லி கணேஷ் காதலித்தார்... கல்யாணமும் செய்தார்..
வில்லிவாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து சென்றனர்.. அங்குதான் இவர்களுக்கு முதலிரவு.. ஆயிரம் கனவுகளுடன் சென்ற அந்த பெண், சுக்குநூறாக நொறுங்கி போய்விட்டார்..

சிறுமி
கல்யாண பெண் அந்த ரூமில் இருக்கும்போதே, 17 வயது சிறுமியை, வேலைக்காரி என்று அழைத்து வந்து, தகாத உறவு வைத்துள்ளார்.. அதுமட்டுமல்ல, புதுமனைவியிடம், வழக்கத்துக்கு மாறாக உறவு வைத்துக்கொள்ள அந்த பெண்ணை கட்டாயம் செய்துள்ளார் லவ்லி கணேஷ்.. அதற்கு அந்த 20 வயது பெண் மறுத்துள்ளார்.. இதனால் ஆத்திரம் அடைந்து அந்த ரூமிலேயே கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

அடி, உதை
அப்போதும் கல்யாண பெண் பெண் சம்மதிக்காததால் அவரை கணேஷ் அடிக்க ஆரம்பித்துள்ளார்.. அவரை கட்டி வைத்து, வாயில் துணியை திணித்து வைத்து, பிறகு பாலியல் தொல்லை தந்துள்ளார். கொடுமை தாங்க முடியாமல், அந்த முதலிரவு ரூமில் இருந்து, தப்பித்து வெளியே வந்த பெண், அந்த வீட்டின் ஹவுஸ்ஓனரிடம் சென்று நடந்ததை எல்லாம் சொல்லி அழுதார்.. பின்னர், அவர் உதவியுடனேயே வில்லிவாக்கம் ஸ்டேஷனில், புதுமாப்பிள்ளை குறித்து புகார் தந்தார்.

விசாரணை
இந்த புகாரின் பேரில், விசாரணை ஆரம்பமானது.. அப்போதுதான் வில்லிவாக்கம் போலீசார் அப்படியே உறைந்து போய்விட்டனர். லவ்லி கணேஷ்-க்கு ஏற்கனவே கல்யாணங்கள் நடந்துள்ளதும், மொத்தம் 11 பெண்களை இப்படியே ஏமாற்றி காதலித்து கல்யாணமும் செய்ததும் தெரியவந்துள்ளது. காதலிக்கும்போதே, அந்த பெண்களிடம் ஜாலியாக இருப்பாராம்.. அதை வீடியோவாகவும் எடத்து வைத்து கொள்வாராம்.. அதை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக செக்ஸ் டார்ச்சர்களை செய்துள்ளார் லவ்லி கணேஷ்.

விசாரணை
இதில் உச்சக்கட்டமாக, தன்னுடைய காதலிகளை, தன்னுடைய நண்பர்களிடமும் உறவு வைத்துக்கொள்ளுமாறு மிரட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.. இன்னும் எத்தனை பெண்களை அவர் ஏமாற்றி உள்ளார் என்பது தெரியவில்லை.. வன்கொடுமை, மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகளை பதிவு செய்துள்ளனர்... புதுமாப்பிள்ளை இப்போது மாமியார் வீட்டு கவனிப்பில் இருக்கிறார்.

தண்டனைகள்
பொள்ளாச்சி சம்பவம் நடந்தபோதே, சூட்டோடு சூட்டாக அந்த குற்றவாளிகளுக்கு தண்டனையை தந்திருந்தால் இதுபோன்ற கொடுமைகள் நடந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது.. அல்லது நாகர்கோவில் காசி விஷயம் வெளியே வந்தவுடனாவது உரிய தண்டனையை தந்திருந்தாலும் குற்றங்கள் குறைந்திருக்கும்.. விசாரணைகள் நீட்டிக்கப்படுவது ஒருவகையில் நல்லது என்றாலும், தாமதப்படுத்தப்படும் தண்டனைகள் நிர்பயா குற்றவாளிகளைபோல எந்த வித தாக்கத்தையும், பயத்தையும் இதுபோன்ற காமுகர்களுக்கு ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை!
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications