"வீராகூட தான் தப்பு பண்ணேன்.. அவரையே லவ் பண்ணேன்.. எனக்கு நியாயம் வேணும்.. பெண் கண்ணீர்
போலீஸ்காரர் மிரட்டுகிறார் என்று இளம்பெண் புகார் தந்துள்ளார்
சென்னை: "நான் உன்கூட தான் ஊர் சுத்தினேன்.. உன்கூட தான் தப்பு பண்ணேன்.. என்னை தொட்டவனையே கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்.. அதுதான் எனக்கு மரியாதை.. இன்னொருத்தன்கூட தப்பு பண்ணால்தான் அது எனக்கு அசிங்கம்.. நீ என்கிட்ட பேசினது எல்லாமே பொய்யா" என்று கான்ஸ்டபிள் வீரமணியிடம் இளம்பெண் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
சென்னையை சேர்ந்தவர் சரஸ்வதி.. 24 வயதாகிறது.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கான்ஸ்டபிள் வீரமணி மீது ஒரு புகார் தந்திருந்தார்.

அதில், போலீஸ் வேலையில் சேருவதற்காக கிரவுண்டுக்கு பிராக்டிஸ் பண்ண போனேன்.. அப்போது வீரமணி என்பவர் பழக்கம் ஆனார்.. அது காதலாக மலர்ந்தது.. பிறகு அவருக்கு மட்டும் வேலை கிடைத்துவிட்டது. நான் போலீசுக்கு தேர்வாகவில்லை.
ஒருமுறை என்னை வீட்டுக்கு வரவழைத்து, கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்தார்.. பிறக்க போகும் குழந்தை மீதும் சத்தியம் செய்தார். இதனால் இருவருமே அன்று சந்தோஷமாக இருந்தோம். இதற்கு பிறகு என்னிடம் அவர் பேசுவதை குறைத்து கொண்டார்.
காரணம் கேட்டதற்கு "என் மகன் சப்-இன்ஸ்பெக்டருக்கு படிக்க போறான்.. அதனால் வேறு பெண்ணை கல்யாணம் செய்ய போகிறோம்" என்று வீரமணியின் தந்தை என்னை மிரட்டினார்.. தன்னையே கல்யாணம் செய்வதாக சொல்லியதை நம்பி அவருடன் கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டேன்.. மோசடி செய்த கான்ஸ்டபிள் வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
இது சம்பந்தமாக அந்த பெண் தெரிவித்தபோது, "நான் வீராவை ரொம்பவும் நம்பினேன்.. என்னை கல்யாணம் செய்துக்கிறதா சொன்னார்.. இப்போ ஏமாத்தறார்.. என் குடும்பத்துக்கு எல்லாமே நான்தான்.. ஆனா, இன்னைக்கு என் அம்மா, அப்பாவே என்னை வெறுக்கிற அளவுக்கு ஆளாயிட்டேன்.. ஒரு அனாதை மாதிரி இன்னைக்கு இருக்கேன்.. நான் எங்கே போவேன். என்னென்ன காரணங்களையோ சொல்லி இப்போ தட்டிக்கழிக்க பார்க்கிறார்.. என்னை அவர் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்"என்கிறாராம் கண்ணீர் மல்க!
இதனிடையே சரஸ்வதி, வீரமணியுடன் பேசும் ஆதாரத்தையும் போலீசில் ஒப்படைத்துள்ளாராம். அதில், "மத்தவங்களோடவா நான் ஊர் சுத்தினேன்.. மத்தவங்ககூடவா தப்பு பண்ணினேன்.. உன்கூடதானே ஊர் சுத்தினேன்.. உன்கூடதானே தப்பு பண்ணேன்.. என்னை தொட்டவனையே கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்.. அதுதான் எனக்கு மரியாதை.. இன்னொருத்தன்கூட தப்பு பண்ணால்தான் அது எனக்கு அசிங்கம்.. என்கூட நீ பழகினது, பேசினது எல்லாமே பொய்யா.. உன்னை எவ்ளோ நம்பினேன்" என்று அழுதபடியே பேச.. வீரமணி அதற்கு சமாதானம் செய்வது போல பேசுகிறார்.
இந்த விவகாரத்தில் உண்மை தன்மை என்ன என்பது வெளிப்படையாக தெரியவில்லை.. என்றாலும் போலீசார்தான் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது!
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications