சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் ஒரே நாளில் 30 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா.. 236 பேர் மரணம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 28,897 பேருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 236 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத் துறை வெளியிடுகிறது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கொரோனா தொற்று உறுதி

அந்த வகையில் இன்றைய தினம் சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குணமாதல்

குணமாதல்

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 13,80,259 ஆகும். இன்று ஒரே நாளில் 23,515 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இது வரை 12,20,064 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கொரோனா பரிசோதனை

கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இன்று 1,44,547 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று ஒரே நாளில் 1,53,790 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 2,40,08,587 சளி மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய பாதிப்பு

புதிய பாதிப்பு

இன்று ஒரே நாளில் 1,45,952 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 2,35,64,234 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்றைய நிலவரப்படி 16,920 ஆண்களுக்கும், 11,977 பெண்களுக்கும் கொரோனா புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வீடு திரும்பியவர்கள்

வீடு திரும்பியவர்கள்

தமிழகத்தில் 267 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இன்று ஒரே நாளில் 236 பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். முதல் முறையாக ஒரே நாளில் இத்தகைய அளவுக்கு பலி எண்ணிக்கை உள்ளது. இதுவரை 23,515 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

English summary
28,897 cases are corona positive today in Tamilnadu. So far 13,80,259 were affected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X