295 பெட்டிகள்.. 6 என்ஜின்கள்! இந்தியாவின் நீளமான ரயில் இதுதான்! எந்த ரூட்டில் ஓடுது தெரியுமா?
சென்னை: இந்தியாவின் மிக நீளமான ரயில் எது என்பதனையும், எந்த ரூட்டில் ஓடுகிறது என்பதையும் இங்கு பார்க்கலாம். இந்த ரயிலில் மொத்தம் 295 பெட்டிகள் இருக்கின்றன. ரயிலின் மொத்த நீளம் சுமார் 3.5 கிலோ மீட்டர் ஆகும். ரயிலை இழுத்து செல்ல 6 என்ஜின்கள் உள்ளன.
இந்தியாவில் பயணம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது ரயில்களாகத்தான் இருக்கும். தொலை தூர பயணம் என்றாலும் சரி.. குறுகிய தொலைவு பயணம் என்றாலும் சரி.. ரயில்கள் இருந்தால் பயணிகளின் முதல் சாய்ஸாக ரயில்களே இருக்கும். கட்டணம் குறைவு, குறிப்பிட்ட நேரத்தில் சென்றுவிடலாம்.

ரயில் பயணங்கள்
சவுகரியம் என பல வசதிகளும் ரயில்களில் இருப்பதால் பயணிகள் பெரும்பாலும் ரயில் பயணத்தைதான் விரும்புகிறார்கள். அதிலும் தொலை தூர பயணம் என்றால் வேறு ஆப்ஷனே கிடையாது. கழிப்பறை வசதி, ஸ்லீப்பர் வசதி உள்ளிட்டவை இருப்பதால் அனைத்து தரப்பு பயணிகளும் ரயில்களில் பயணம் செய்வதைதான் விரும்புகிறார்கள். இதனால் ரயில்கள் குறித்த தகவல்கள் என்றால் பயணிகளுக்கு எப்போதுமே ஆர்வம் கொடுக்க கூடிய ஒன்றாக உள்ளது.
மிக நீளமான ரயில்
உலகின் மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்ட ரயில்வேக்களில் இந்திய ரயில்வேயும் ஒன்று. பல லட்சம் கிலோ மீட்டர் தொலைவிலான வழித்தடங்கள், லட்சக்கணக்கான ஊழியர்களும் இந்தியாவில் அதிகம் பேர் பணியாற்றும் நிறுவனமாகவும் இந்திய ரயில்வே உள்ளது. ரயில்களை பொறுத்தவரை பயணிகள் ரயில் மட்டும் இன்றி சரக்கு ரயில்களும் அதிக அளவில் இயக்கப்படுகின்றன.
ரயிலுக்கு காத்திருக்கும் போது அடிக்கடி இத்தகைய சரக்கு ரயில்களை நாம் பார்த்து இருக்க முடியும். பெட்டிகளை எண்ணி முடிப்பதற்குள் தலை சுற்றிவிடும் போல இருக்கே என நினைக்கும் அளவுக்கு சரக்கு ரயில்களின் நீளம் இருக்கும். இந்தியாவிலே மிக நீளமான ரயில் குறித்த விவரங்களைத்தான் இன்று பார்க்க இருக்கிறோம்.
வாசுகி சரக்கு ரயில்
இந்தியாவின் மிக நீளமான ரயில் என்ற பெருமையை வாசுகி என்ற சரக்கு ரயில் பெற்றுள்ளது. இந்த ரயிலின் மொத்த பெட்டிகள் எத்தனை தெரியுமா? 295-ஆம்.. இந்த ரயிலின் மொத்த நீளம் சுமார் 3.5 கிலோ மீட்டர் ஆகும். நிலக்கரியை எடுத்தும் செல்லும் பணியில் இந்த ரயில் ஈடுபடுத்தப்படுகிறது. இந்த ரயிலை இழுத்து செல்ல 6 என்ஜின்கள் உள்ளன. ஒரே டிரிப்பில் 27 ஆயிரம் டன் நிலக்கரியை இந்த ரயில் மூலம் எடுத்து செல்ல முடியும். இதனை பயன்படுத்தி ஒரு அனல் மின் நிலையத்தில் ஒருநாளைக்கு 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை மேற்கோள்ள முடியும்.
சத்தீஸ்கரின் கோர்பா நகரில் இருந்து மகராஷ்டிராவில் உள்ள ராஜ்நந்த்கான் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் மொத்த பயண தூரம் 267 கிலோ மீட்டர் ஆகும். 11 மணி நேரம் 20 நிமிடங்கள் பயணம் செய்து பயண எல்லையை இந்த ரயில் எட்டுகிறது. ஒரு ரயில் நிலையத்தை இந்த ரயில் கடந்து செல்வதற்கு மட்டும் சுமார் 4 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளுமாம்.
எப்படி இந்த பெயர் வந்தது?
முதல் பெட்டியில் இருந்து கடைசி பெட்டி வரை ஒருவர் எண்ண தொடங்கினால் சுமார் ஒரு மணி நேரம் ஆகும். வழக்கமான சரக்கு ரயிலை விட மும்மடங்கு திறன் கொண்ட என்ஜின்கள் இந்த ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்து புராணங்களில் வாசுகி என்ற பெயர் உள்ளது. நாகராஜா (பாம்புகளின் ராஜா) வம்சத்தைச் சேர்ந்த வாசுகி, சிவபெருமானின் தீவிர சீடர். பொறுமை, வலிமை மற்றும் பரந்த தன்மையை அதாவது மிகப்பெரியது என்பதை இந்தப் பெயர் குறிக்கிறது. எனவே இந்த பிரமாண்ட ரயிலின் திறன் மற்றும் அதன் ஆற்றலை குறிப்பிடும் விதமாக இந்த ரயிலுக்கு வாசுகி எனப்பெயர் வைத்து இருக்கிறார்கள்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications