தூக்கில் தொங்கிய.. ரீட்டா முகத்தில் ரத்த காயம்.. பெண் தொழிலதிபர் கொலையா.. தீவிரமாகும் விசாரணை
பெண் தொழிலதிபர் ரீட்டா தற்கொலையில் சந்தேகம் எழுந்துள்ளது
Recommended Video
சென்னை: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட, தொழிலதிபர் ரீட்டாவின் முகத்தில் ரத்தக் காயங்கள் இருக்கிறதாம்.. அதனால் இந்த மரணம் தொடர்பாக போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில், குடும்பத்துடன் வசித்து வந்தவர் ரீட்டா லங்காலிங்கம். டொயொட்டா கார்களை விற்பனை செய்யும் டீலர் நிறுவனமான லேன்சன் டொயோட்டாவின் இணை இயக்குநராக இருந்தவர். கோயம்பேட்டில் இந்த கார் ஷோரூம் உள்ளது.
இவரது கணவர் கணவர் லங்கா லிங்காதான், இந்த லேன்சன் டொயோட்டா ஷோரூம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக உள்ளார். மகள் லாவண்யா சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். மகன் லிவாஸ் கல்யாணமாகி தந்தையுடன் பிசினஸ் பார்த்து வருகிறார்.

ஏசுபாதம்
இந்நிலையில், நேற்று காலை ரீட்டா தன் அறையை விட்டு ரொம்ப நேரமாகியும் வெளியே வரவில்லை. அதனால் அவரது வீட்டு சூப்பர்வைசர் ஏசுபாதம், சந்தேகத்தின் பேரில் ரூம் ஜன்னலில் எட்டி பார்த்தபோது, ரீட்டா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.

விசாரரணை
உடனடியாக நுங்கம்பாக்கம் போலீசுக்கு தகவல் அளிக்கவும், விரைந்த வந்த போலீசார் ரீட்டாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ரீட்டா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது உடனடியாக தெரியவில்லை. தொழில் ரீதியாக கணவருடன் ரீட்டாவுக்கு பிரச்சனைகள் இருந்ததாக தெரிகிறது.

தகராறு
இரு தினங்களுக்கு முன்புகூட, ஆட்டோ மொபைல் சரிவு, பொருளாதார மந்தநிலையால் நிறுவனத்தில் ஏற்பட்டிருக்கும் நலிவு குறித்து நிறுவன மேனேஜர்களிடம் விவாதிக்கப்பட்டு உள்ளது. இதில் மேனேஜர்களை ரீட்டா சரமாரியாக திட்டிவிட்டாராம். இதனால் கணவன் வீட்டுக்கு வந்து, ரீட்டாவுடன் சண்டை போட்டுள்ளார். இந்த தகராறு முற்றிய நிலையில்தான், கணவர் கோபித்து கொண்டு வீட்டை விட்டு போய்விட்டதாகவும், ராத்திரி முழுக்க வரவே இல்லை என்றும் தகவல்கள் வந்தன.

ரத்த காயம்
அதாவது ரீட்டா தற்கொலை செய்து கொண்டபோது, கணவர் வீட்டிலேயே இல்லை. எனினும் ரீட்டாவின் மரணத்தில் சந்தேகம் கிளம்பி உள்ளது. தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ரீட்டாவின் முகத்தில ரத்தக் காயங்கள் உள்ளதாம். உள்பக்கமாக கதவு பூட்டப்பட்டு இருந்தாலும், ஜன்னல் ஸ்கிரீனுக்கு போடப்படும் கம்பியில் தொங்கியபடி கிடந்ததும் போலீசாருக்கு நிறைய சந்தேகத்தை கிளப்பி உள்ளது.

விசாரணை
ஏனென்றால் ஃப்ரெஞ்ச் டோர் என்று சொல்லப்படும் ஆளுயர ஜன்னல் தாழ்ப்பாள் போடாமல் திறந்து இருந்தது. அதனால் யாராவது உள்ளே புகுந்து கொன்றிருப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் இன்னும் வரவில்லை. அதன்பின்னரே ரீட்டாவின் மரண முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications