காலையிலேயே சென்னையில் ஐடி அதிகாரிகள் அதிரடி..அண்ணா நகரில் சீல் வைப்பு.. அமைந்தகரையில் தீவிரம்
சென்னை: தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை செய்யும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய சுமார் 30 இடங்களில் நேற்று வருமான வரி சோதனை நடந்தது. இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு ஒப்பந்த பணிகளை தனியார் கட்டுமான நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான மற்றும் நெருக்கமான இடங்கள் என சென்னை, கோவை, ஈரோடு, நாமக்கல் உள்பட தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை செய்தனர்.

சென்னையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்களின் முக்கிய அலுவலகங்கள், கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர் வீடுகள், அவரது அலுவலகங்களில் இந்த சோதனை நடந்தது. சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், எழும்பூர் மற்றும் கோவை உள்பட மேலும் சில பகுதிகளிலும் வருமான வரி சோதனை நடந்தது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
தமிழக அரசின் பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வாரியம் உள்பட பல துறைகளில் ஒப்பந்தம் பெற்று, சென்னை, நாமக்கல், கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் கட்டுமான பணிகளை சத்தியமூர்த்தி என்பவரது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரின் பேரில் அந்த நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரி சோதனை நேற்று நடந்தது,.
இதன்படி நாமக்கல்லில் உள்ள சத்தியமூர்த்தியின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் 15-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினார்கள்.
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியைச் சேர்ந்த சி.எம்.கே. கட்டுமான நிறுவனத்தை நடத்தி வரும் குழந்தைசாமி என்பவருக்கு தொடர்பான 4 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதேபோல் ரகுபதி நாயக்கன்பாளையத்தை சேர்ந்த கட்டுமான நிறுவனர் செல்வசுந்தரம் என்பவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் திங்கள் அன்று சோதனை நடத்தினர்.
மேலும் கோவை காளப்பட்டியில் ஈரோட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் மற்றும் சதாசிவம் ஆகியோர் நடத்தி வரும் கட்டுமான நிறுவனம், சூலூர் அருகே ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் ராமநாதன் வீடு உள்பட 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதனிடையே தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணிகளை செய்யும் தனியார் கட்டுமான நிறுவனங்களில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள பிரபல கட்டுமான நிறுவனத்தின் தலைமையகத்தில் இன்றும் சோதனை நடந்து வருகிறது. சென்னை எழும்பூர் காஜா மேஜர் சாலையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடக்கிறது. சென்னை அண்ணா நகர் ஏவி பிளாக்கில் உள்ள வெங்கடாச்சலம் என்பவர் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். தமிழகம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து சோதனை நடப்பதால் சோதனை நிறைவடைந்த உடனேயே இதுகுறித்த விவரங்கள் வெளியிடப்பட வாய்ப்பு உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications