பெருங்களத்தூரையே அதிர வைத்த பாஜக பிரமுகர் கொலை.. 3 பேர் அதிரடியாக கைது
சென்னை: சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் பாஜக எஸ்சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்
சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர், காமராஜர் நகரை சேர்ந்தவர் பீரி வெங்கடேசன் (வயது35). ரவுடியான இவர் மீது தாம்பரம், பீர்க்கன்கரணை உள்ளிட்ட போலீஸ் ஸ்டேசனில் பல்வேறு குற்ற வழக்குகள் இருக்கின்றன.

அண்மையில் தான் பீரி வெங்கடேசன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.இ வர் பெருங்களத்தூர், முடிச்சூர் பகுதியில் எஸ்சி மண்டல தலைவராக இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் பழைய பெருங்களத்தூர், குட்வில் நகரில் உள்ள காலி இடத்தில் இருந்த முட்புரில் பீரி வெங்கடேசன் பலத்த வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக பீர்க்கன் கரணை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேரில் வந்த போலீசார், பீரி வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பீரி வெங்கடேசன் கொலை குறித்து போலீசார் கூறும் போது, ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளதால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் பழிக்குப்பழியாக தீர்த்து கட்டியிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர். இதனிடையே குற்றவாளிகள் என்பது குறித்து போலீசார் விசாணையை தீவிரப்படுத்தினார்கள்
பீரி வெங்கடேசன் நேற்று முன்தினம் இரவு கடைசியாக யாருடன் பேசினார். அவரை எங்கு சென்றார்கள். என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தனர்.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசனுடன் தொடர்ந்து மோதலில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த 3 பேர் ஜெயிலில் இருந்து வெளியே வந்திருக்கிறார்கள் தற்போது அவர்கள் தலைமறைவாக இருப்பதால் பீரி வெங்கடேசனை அவர்கள் கொன்று இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டது.
ஏற்கனவே பீரி வெங்கடேசனை கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு வீட்டில் வைத்தே அவரை மர்ம கும்பல் வெட்டி கொல்ல முயன்றுள்ளது. இதில் வெங்கடேசன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்ட நிலையில், அப்போதே போலீசார் வெங்கடேசனை பெருங்களத்தூர் குதியில் இப்போது இருக்க வேண்டாம் என்று எச்சரித்தனர்.
இதைத்தொடர்ந்தே பீரி வெங்கடேசன் புதுபெருங்களத்தூரை விட்டு வெளியே சென்றார். இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அவர் ஊருக்கு வந்திருக்கிறார். இதனை அறிந்த எதிர்தரப்பினர் வெங்கடேசனை திட்டம் தீட்டி பழிதீர்த்திருந்தது.
இந்நிலையில் பீர்க்கன்காரனை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான தீபக், சரண்குமார், புவனேஷ் குமார் ஆகியோர் பீரி வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என போலீஸார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும் சிதம்பரம் அருகே கைது செய்த போலீசார், பெருங்களத்தூர் அழைத்து வந்து விசாரித்து வருகிறார்கள்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications