முக்கிய அறிவிப்பு.. தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த 3 மாதம் அவகாசம்!
சென்னை: தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த 3 மாதம் அவகாசம் அளித்து தமழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலைக்கு செல்லாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்க கிடக்கிறார்கள். இதனால் பலர் வறுமையில் சிக்கி தவிக்கிறார்கள். தொழில்கள் முடங்கி கிடக்கின்றன. மொத்தமாக தமிழகம் ஸ்தம்பித்து போய் கிடக்கிறது.
இதனால் தமிழக அரசு தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த 3 மாதம் அவகாசம் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை உள்பட அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும், சொத்து வரி, குடிநீர் வரியை எந்த வித அபாராதமும் இன்றி ஜுன் 30ம் தேதி வரை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது தமிழகத்தின் அனைத்து ஊர் மக்களும் மார்ச் 31 வரை செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரியை மூன்று அவகாசத்துடன் ஜுன் 30ம் தேதி வரை செலுத்தலாம் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications