சுட சுட ரெடி.. தமிழ்நாடு பட்ஜெட்டில் காத்திருக்கும் அந்த 3 சர்ப்ரைஸ்.. தங்கம் தரப்போகும் ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பின்வரும் அறிவிப்புகள் அதிகம் கவனம்பெற உள்ளன.

old pension scheme pension


புதிய சாலைகள்

தமிழ்நாடு பட்ஜெட்டில் புதிய எக்ஸ்பிரஸ் வே தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் வெறும் 94.8 கிமீ தூரத்திற்கு சென்னை - குமரி இடையே சில ஸ்ட்ரெட்ச் 6 வழி சாலையாக அமைக்கப்பட்டு உள்ளன. வடஇந்தியாவில் இருப்பது போல நீண்ட எக்ஸ்பிரஸ் வே சாலைகள் தமிழ்நாட்டில் கட்டப்படவில்லை.

தமிழ்நாட்டில் போதிய அளவில் எக்ஸ்பிரஸ் வே கட்டுமானங்கள் தொடங்கப்படாமல் இருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அதிக அளவில் எக்ஸ்பிரஸ் வே. கட்டப்படுவதால் தமிழ்நாடு பின்தங்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. போதிய நிலம் கிடைப்பது இல்லை, விவசாய நில பிரச்சனை, மக்கள் போராட்டம், திட்டத்தின் தேவை புரியாமல் இருப்பது இந்த பிரச்சனைக்கு காரணமாக மாறி உள்ளது.

பழைய ஓய்வூதியம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சரண் விடுப்புகளை பணம் ஈட்டும் அனுமதி உள்ளிட்ட அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் திமுக அரசை மிரட்டிக் கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்களிடம் அமைச்சர் ஏ.வ.வேலு சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தையில், பட்ஜெட்டில் உங்களுக்கு நல்லது நடக்கும்; வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிடுங்கள் என கேட்டுக்கொண்டதால், மாநிலம் தழுவிய போராட்டத்தை ஒத்தி வைத்தனர். ஆனால், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடப்பு நிதியாண்டில் அமல்படுத்த இயலாது என அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இதற்கு பதிலாக, சில கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்பை பட்ஜெட்டில் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, அதிகரிக்கும் கடன் சுமையை சமாளிக்கவும், சொந்த வரி வருவாயை அதிகரிக்கவும் சில மறைமுக வரி உயர்வு இருக்கும் என்றும் தெரிகிறது. ஆனால், பட்ஜெட்டில் நேரடி வரி உயர்வு, மறைமுக வரி உயர்வு எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நடுத்தரவர்க்கத்தினரிடம் அதிகமாக இருந்து வருகிறது.

இந்தாண்டு தான் முழு பட்ஜெட்டை திமுக அரசு தாக்கல் செய்ய முடியும் என்பதால், கடன் வாங்கினாலும் பரவாயில்லை வரி இல்லாத பட்ஜெட் , சலுகைகள் நிறைந்த பட்ஜெட் என்பதாக இருக்க வேண்டும் என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், நிதித்துறை அதிகாரிகளிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.

தமிழ்நாடு நிதி நிலை

வரும் 14ம் தேதி மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், முதல்முறையாக அன்று பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கிறது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு பட்ஜெட்டில் மகளிர் உரிமை தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை காலை 9.30-க்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசின் நிதிநிலை, உள்நாட்டு உற்பத்தி, செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, வரும் ஆண்டுகளில் மாநில நிதிநிலை எப்படி இருக்கும் என பல்வேறு தரவுகள் இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறும்

பொருளாதார ஆய்வறிக்கை நிதி அமைச்சகத்தில் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறையின் பொருளாதாரப் பிரிவால் தயாரிக்கப்படுகிறது. பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது பொருளாதாரத்தின் நிலை மற்றும் பல்வேறு குறிகாட்டிகள் பற்றிய டேட்டாக்களை கொண்டு இருக்கும். நடப்பு ஆண்டிற்கான பொருளாதாரம் எப்படி இருக்கும் , ஜிடிபி எப்படி இருக்கும், விலைவாசி எப்படி இருக்கும், பணவீக்கம் எப்படி இருக்கும் என்ற விவரங்களையும் இது வழங்கும் .

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+