காலையிலேயே கதறிய சென்னை.. சார்ஜ் ஒயர் கழுத்தில் மாட்டி.. தலையில் டிவி விழுந்து.. 3 வயது குழந்தை பலி
டிவி தலையில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழந்துவிட்டது
சென்னை: ஷெல்ப் மேல இருந்த டிவி டமார் என 3 வயசு குழந்தை மீது விழுந்துவிட்டது.. அங்கு செல்போன் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்ததால் அந்த ஒயர் மாட்டி குழந்தையின் தலையில் விழுந்ததில் அந்த குழந்தை பரிதாபமாக இறந்துவிட்டது.
சென்னை சேலையூர் அகரம் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள ஒரு வீட்டில் அலமாரியில் செல்போன் சார்ஜ் போட்டிருந்தனர்.. அதே ஷெல்ப்பில் டிவியும் வைத்திருந்தனர்.. வீட்டில் யாருமே இல்லை.. அந்த நேரம் பார்த்து செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.

அதனால் விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை கவியரசு ஓடிச்சென்று செல்போனை எடுக்க முயன்றான்.. அப்போது சார்ஜர் வயரில் மாட்டியிருந்த டிவி, செல்போனை எடுக்க குழந்தை இழுத்தது.. அப்போது எதிர்பாராதவிதமாக டிவி குழந்தை மீது தொப்பென விழுந்துவிட்டது.
இந்த சத்தத்தை கேட்டு, வெளியில் இருந்த குழந்தையின் அப்பா அலறி அடித்து கொண்டு ஓடிவந்தார்.. டிபி மொத்தமாகவே குழந்தை மீது விழுந்துகிடந்தது.. உடனடியாக கவியரசுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால் பிரயோஜனம் இல்லை.. வழியிலேயே குழந்தை இறந்துவிட்டது என்று டாக்டர்கள் சொன்னார்கள்.
இதை கேட்டதும் குடும்பத்தினர் தலையில் அடித்து கொண்டு அழுதனர்.. கவியரசுவின் உடல் இப்போது போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டிவி மேலே விழுந்து குழந்தை இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications