கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய எதிர்த்தால் 3 ஆண்டு ஜெயில்- தமிழக அரசு அவசர சட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா உள்ளிட்ட தொற்று நோயால் உயிரிழந்தவரை அடக்கம் செய்வதை எதிர்த்து அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு இயற்றியுள்ளது.

3 Years Jail.. TN promulgates ordinance on Burial of Coronavirus Victims

இது தொடர்பாக தமிழக அரசுவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசினால், அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் ( Notified Disease) உயிரிழந்தவர்களின் உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம்/ தகனம் செய்வதைத் தடுக்கும் செயலையும் தடுக்க முயற்சிப்பதையும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படி குற்றமாக்கி கடுமையாக தண்டனை வழங்கு நோக்கில் தமிழக அரசு அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது.

3 Years Jail.. TN promulgates ordinance on Burial of Coronavirus Victims

இந்த அவசரச் சட்டத்தின்படி அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட தொற்று நோயினால் ( Notified Disease) உயிரிழந்தவர்களின் உடலை கண்ணியமான முறையில் அடக்கம்/ தகனம் செய்வதைத் தடுப்பமும் தடுக்க முயற்சிப்பதும் குற்றமாக்கப்பட்டு, அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 பிரிவு -74ன் படி அபராதம் உட்பட குறைந்தபட்சமாக ஓராண்டு சிறைத் தண்டனையும் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+