போகியால் ஓடுதளமே தெரியாத அளவுக்கு புகை மூட்டம்! சென்னையில் இருந்து 30 விமானங்கள் தாமதமாக புறப்பாடு
சென்னை: சென்னையில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் புறப்பட வேண்டிய விமானங்கள் பனி மூட்டம், போகி பண்டிகையின் புகைமூட்டம் காரணமாக தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓடுபாதையே தெரியாத அளவுக்கு புகை மூட்டம் நிலவி வருகிறது. மார்கழி மாதத்தில் பனிமூட்டம் இருக்கும். அதிலும் இன்று மார்கழியின் கடைசி நாள் என்பதால் பனி அதிகமாக காணப்படுகிறது.

இந்த நிலையில் போகி பண்டிகை என்பதால் இன்றைய தினம் பழைய பொருட்களை மக்கள் எரித்து வருவதால் சென்னையில் புகை மூட்டமும் அதிகமாக இருக்கிறது. எனவே பனி மூட்டம், புகை மூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன.
அதாவது சென்னையில் இருந்து துபாய், சிங்கப்பூர், அபுதாபி, கோலாலம்பூர், கோவா, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களின் நேரத்தில் மாற்றம் என பயணிகளுக்கு எஸ்எம்எஸ் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அது போல் டெல்லி, பெங்களூரில் இருந்து அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் ஓடுதளமே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications