"30 சதவிகிதம்.." தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் மீண்டும் கிளம்பிய அதே பிரச்சினை.. பெரிய சிக்கல்!
சென்னை: நமது ஊர்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு குறித்து பலரும் புகார் அளித்து வரும் நிலையில், இது தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே மருத்துவ கட்டமைப்பு சிறப்பாக உள்ள மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இங்கு மருத்துவர்கள் உள்ளனர் என்பது சிறப்பு வாய்ந்த விஷயமாகும்.
அதேபோல இங்கு மாநிலத்தில் இருக்கும் கிட்டதட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்கிறது. அந்தளவுக்கு விரிவான ஒரு மருத்துவ கட்டமைப்பைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது.

மருத்துவமனைகள்
அதேநேரம் இங்கு பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் நிலைமை அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இதனால் நோயாளிகள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மோசமாக உள்ளதாகத் தொடர்ச்சியாகப் புகார்கள் உள்ளன. இதனால் நோயாளிகள் மட்டுமின்றி அவர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களும் கூட சில அசவுகரியத்தை எதிர்கொள்ள நேரிடுகிறது.

அமைச்சர் மா.சு
சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது 3ஆம் மாடியில் அமைந்துள்ள கை அறுவை சிகிச்சை சிறப்புப் பிரிவைப் பார்வையிட்டு விட்டு, தரைதளத்திற்கு வர லிப்ட் ஏறினார்.. அப்போது லிப்ட் நடுவழியிலேயே பாதியில் நிற்க அமைச்சர் மா.சு கொஞ்ச நேரம் அங்கேயே சிக்கிக் கொண்டார். பெரும் போராட்டத்திற்குப் பின்னரே அவரை வெளியே பத்திரமாக அழைத்து வந்தனர்.

மருத்துவமனைகள்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் லிப்ட்டை பராமரிக்காத ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், இதே ஏதோ ஒரு மருத்துவமனையில் நடக்கும் நிகழ்வு இல்லை. தமிழ்நாடு முழுக்க பல அரசு மருத்துவமனைகளிலும் லிப்ட் இதேபோலத் தான் உள்ளதாகப் புகார்கள் கிளம்பியுள்ளன. அமைச்சர் இப்படி லிப்டில் சிக்கியதை அடுத்து, சமீபத்தில் தான் மாநிலத்தின் ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள லிப்ட்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

லிப்ட்
இதனிடையே நாமக்கல்லில் பணிபுரியும் ஒரு மூத்த அரசு மருத்துவர் கூறுகையில், "இப்போது பொது மருத்துவமனைகள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக லிப்ட் உள்ளது.. மறுபுறம், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பல அரசு மருத்துவமனைகள் இன்னும் லிப்ட் வசதி ஏற்படுத்தக் கூட இல்லை.. இந்த மருத்துவமனைகளில், மேல்மாடிக்குச் செல்லும் நோயாளிகள் சாய்வு தளத்தைப் பயன்படுத்துகிறார்கள்" என்றார்.

30% லிப்ட்கள்
மேலும், லிப்ட் வசதியுள்ள பல மருத்துவமனைகளில் லிப் ஆப்ரேடர் இல்லாததால் நோயாளிகளே லிப்டை இயக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுக்க சுமார் 800 லிப்ட்களை நாங்கள் பராமரித்து வருகிறது. இப்போது நடத்தப்பட்ட ஆய்வில் மாநிலத்தில் உள்ள லிப்ட்களில் சுமார் 30% லிப்ட்கள் மாற்றப்பட வேண்டிய நிலையில் இருப்பதைக் கண்டறிந்தோம்.

மாற்றப்படும்
பழைய லிஃப்ட்களை அடையாளம் காணும் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்.. இந்த மாத இறுதிக்குள் இது குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பித்து விடுவோம்.. வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி கிடைத்தவுடன் லிப்ட்களை மாற்றும் பணிகளைத் தொடங்கிவிடுவோம்" என்றார். மோசமான நிலையில் இருக்கும் லிப்ட்களை அடையாளம் காண அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பாராட்டினாலும் கூட விரைவில் லிப்ட்களை மாற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் மோசமான சம்பவங்கள் எதாவது நடந்துவிடும் என்றும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications