"தாமரைப்பாக்கத்தில்" கால்வைத்த ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.. ரேஷன் கடைகளுக்கு குட் நியூஸ்.. தமிழக மக்கள் குஷி

ரேஷன் கடைகளுக்கு வண்ணம் பூசி, தூய்மை செய்யும் பணிகள் துரிதம் எடுத்துள்ளன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் பிறப்பித்திருந்த நிலையில், அது தற்போது வேகம் எடுத்துள்ளது.. அதிலும், 73 ரேஷன் கடைகள் குறித்து வெளியான அறிவிப்பினால், பொதுமக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே பல பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் காக்கப்பட்டு வருகின்றன..

 ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்

மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. இந்நிலையில், 2 மாதத்துக்கு முன்பு, கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.. அவர் சொல்லும்போது, "35 ஆயிரம் ரேஷன் கடைகளை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.. ஆனால், ஒரேயடியாக இவைகளை மாற்றி அமைப்பது கடினம்.. எனவே, அடுத்த 3 மாதங்களில் படிப்படியாக மாற்றி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியிருந்தார். அந்த பணிகள்தான் தற்போது வேகம் எடுத்து வருகின்றன.. தமிழகத்தில், 35 ஆயிரம் ரேஷன் கடைகள் உள்ளன... இதில், பெரும்பாலான கடைகள் செயல்படும் கட்டடங்கள், பாழடைந்து காட்சி அளிக்கின்றன.

 நம்ம ரேஷன் கடை

நம்ம ரேஷன் கடை

இந்த கடைகளில் சரிவர தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுவதில்லை.. இதனால், மக்கள் ஒருங்கிணைப்புடன் ரேஷன் கடைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, "நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை" என்ற புதிய முயற்சியை, கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன் துவக்கியுள்ளார்.. இந்த திட்டத்தின்படி, தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உடன் இணைந்து, ரேஷன் கடைகளுக்கு வண்ணம் பூசுவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

கலர்புல்

கலர்புல்

அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் துாய்மை பணி செய்து, பெயிண்ட் அடிப்பது போன்ற பணிகள், முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன... கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் கடன்கள், கூட்டுறவு சங்க சேவைகள் தொடர்பாக, கடை சுவர்களில் விழிப்புணர்வு வாசகங்களும் எழுதப்படுகின்றன... இந்த வாசகங்கள் பொதுமக்களை கவரும் வகையில் அமைந்து வருகிறது.. தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள 75 நியாய விலை கடைகளை தேர்ந்தெடுத்து முன்மாதிரி நியாய விலை கடையாக செயல்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பணிகள் நடந்து வருகின்றன..

ஹேப்பி

ஹேப்பி

இந்த கடைகளில் கழிப்பறை வசதி, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல சாய்வுத்தள வசதி, முதியோர் அமர ஓய்விருக்கை போன்றவை அமைக்கப்பட உள்ளதாம்.. மேலும், நியாய விலை கடை வேலை நேரங்களில் விற்பனை முனைய இயந்திரங்கள்திறம்பட செயல்படுவதை உறுதி செய்தல், மூத்த குடி மக்களுக்கு தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சங்களை கொண்டதாக இந்த முன்மாதிரி நியாய விலை கடைகள் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 73 ISO

73 ISO

அந்தவகையில், இதுவரை 744 கடைகளில் பழுதுபார்க்கும் பணியும், 634 கடைகளில் தரைத்தளம் சீரமைப்பு பணியும், 1,367 கடைகளில் வண்ணம் பூசும் பணியும் நிறைவடைந்திருக்கிறது. கடந்த மாதம் 30-ந்தேதி நிலவரப்படி இதுவரை 1,197 ரேஷன் கடைகளில் நவீனமயமாக்குதல் பணி நிறைவுபெற்று, அந்த கடைகள் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. குறிப்பாக இதில் 300 கடைகளின் முகப்பு தோற்றம் அழகுற மாற்றப்பட்டுள்ளது.. எஞ்சிய கடைகளில் விரைவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த கடைகளும் பொலிவு பெற காத்திருக்கின்றன.

தாமரைப்பாக்கம்

தாமரைப்பாக்கம்

தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளால் ரேஷன் கடைகளுக்கு வரும் பயனாளிகளும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதைவிட சிறப்பம்சமாக, ஐஎஸ்ஓ தரச்சான்று குறிப்பாக 73 ரேஷன் கடைகளுக்கு இந்த ஐஎஸ்ஓ தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இதில் தர்மபுரியில் 3 கடைகளும், காஞ்சிபுரத்தில் 4 கடைகளும், நாமக்கல்லில் 9 கடைகளும், தேனியில் 40 கடைகளும், திருவள்ளூரில் 17 கடைகளும் அடங்கும். குறிப்பாக, திருவள்ளூர் மாவட்டத்துக்குட்பட்ட ஜே.ஜே.754, தாமரைப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இச்சங்கத்தின் கீழ் மொத்தம் 5 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.

 நியூ பில்டிங்

நியூ பில்டிங்

இங்கு உறுப்பினர்களின் தேவையறிந்து உரம் விற்பனை செய்தல், நகைக்கடன், சுய உதவிக்குழு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களும் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு 'இ-சேவை' மையமும் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமல்ல, இதில் இதுவரை வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த தாமரைப்பாக்கம் கூட்டுறவு ரேஷன் கடைக்கு, கடந்த 2020-ம் ஆண்டில் எம்எல்ஏ தொகுதி நிதியின்கீழ் புதிய கட்டிடம் கட்டிதரப்பட்டுள்ளது. இந்த தாமரைப்பாக்கத்தில் உள்ள அந்த குறிப்பிட்ட 5 நியாய விலைக்கடைகளை, கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கொட்டும் மழையிலும் நேற்றைய தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்..

ஆக்‌ஷன்

ஆக்‌ஷன்

அப்போது, பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா சரியான எடையுடன் அனைத்து பொருட்களும் வழங்குகிறார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான குறைகளை ஊழியர்களிடம் கேட்டறிந்தார்.. ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், 3 மாதங்கள் பொருள்கள் வாங்காமல் இருந்தால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது... ஒரு நபர் குடும்ப அட்டையில் 2.45 லட்சம் பேர் இறந்துவிட்டனர். கூட்டு அட்டையில் 14.26 லட்சம் பேர் இறந்துள்ளனர். அத்தகையோரை கண்டறிந்து நீக்கவே தொடர்ந்து 3 மாதமாக பொருள் வாங்காமல்உள்ள அட்டைகளைக் கண்காணித்து விசாரிக்கிறோம். விசாரணையில்லாமல் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என்றார் ராதாகிருஷ்ணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+