அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் விறுவிறு.. முதல் நாளில் 38 பேர் விருப்ப மனு!
முதல் நாளான இன்று அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு 38 விருப்ப மனுக்கள் வந்துள்ளன.
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு முதல் நாளான இன்று 38 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி தவிர, அவரது பெயரில் மேலும் 37 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது அதிமுக பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வரும் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்றும், நாளையும் நடக்கிறது. வேட்புமனு பரிசீலனை 20ஆம் தேதி நடக்கிறது. வேட்பு மனுக்களை 21ஆம் தேதி மாலை 3 மணி வரை திரும்பப் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 26 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். மார்ச் 27ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமி இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி.
இன்று முதல் நாள் விருப்பமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. முதல் நாளான இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை மொத்தம் 38 பேர் விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் எடப்பாடி பழனிசாமி அல்லாமல் 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளையும் எடப்பாடி பழனிசாமி தரப்பிலேயே உறுப்பினர்கள் பலர் விருப்பமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. நாளை பிற்பகல் 3 மணி வரை விருப்பமனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. அதன்பிறகு வேறு யார் பெயரிலும் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமியே போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்படுவார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் விருப்ப மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் பரவியது. ஆனால், இந்த தகவலுக்கு ஓ.பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டவிதிகளுக்கு முரணானது என்றும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் விருப்ப மனு தாக்கல் இல்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே












Click it and Unblock the Notifications