39 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி.. புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் கடை மூடல்!
சென்னை: சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸில் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த கடை மூடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டாவது அலையால் ஏராளமானோர் பாதிக்கப்படுகிறார்கள். தினந்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள மதர்சா துணிக் கடையில் 12 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த ஊழியர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை.

சரவணா ஸ்டோர்ஸ்
இதையடுத்து புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸில் உள்ள 166 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் வெள்ளிக்கிழமை 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. மீதமுள்ள 159 பேருக்கு சனிக்கிழமை சோதனை செய்யப்பட்டதில் 26 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. ஆக சரவணா ஸ்டோர்ஸில் 39 ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கண்காணித்து
இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்கள் கூறுகையில் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அனைவரும் இளைஞர்கள். சிலர் நோய் தொற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டார்கள். இவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதும் இல்லை. நாங்கள் தொடர்ந்து அவர்களை கண்காணித்து வருகிறோம்.

தனிமை
அந்த சாலையில் உள்ள வீடுகளில் உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. அவர்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டார்கள். நோய் தொற்று எங்கிருந்து பரவியது என தெரியவில்லை. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீட்டு உபயோக பொருட்கள்
அவர்கள் எங்கும் பயணம் செய்ததாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் மூடப்பட்டது. கரியப்பா சாலையில் உள்ள வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையும் மூடப்பட்டுவிட்டது. அந்த சாலையும் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் சேர்க்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
Bike Taxi Tamil Nadu: விதிமுறைகள் எப்போது அமலுக்கு வரும்?.. அறிக்கை அளிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்!












Click it and Unblock the Notifications