சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மிட்நைட்டில்" எகிறிய மனைவி.. கயல்விழி பேச பேச மலைத்த போலீஸ்.. சபலத்தில் சாய்ந்த பரிதாப இளைஞர்கள்

திருமண மோசடி செய்து ஏமாற்றிவிட்டு மாயமான தாம்பரம் பெண்ணிடம் விசாரணை நடக்கிறது

Google Oneindia Tamil News

சென்னை: 10 நாட்களுக்கு மேல் ஒருவருடன் சேர்ந்து, குடும்பம் நடத்த மாட்டாராம் அபிநயா.. திருமண மோசடி செய்து போலீசில் வசமாக சிக்கி உள்ள நிலையில், விசாரணையில் தெரியவந்துள்ளது.

தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன்.. 25 வயதாகிறது.. இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

அப்போது, முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த அபிநயா என்பவருடன் நடராஜனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அபிநயாவுக்கு 28 வயாகிறது..

புள்ளி வெச்ச எடப்பாடி.. கோலத்தை புள்ளி வெச்ச எடப்பாடி.. கோலத்தை "அவர்" போடறாரே.. அமித்ஷா டேபிளில் "ஃபைல்"..ஸ்டாலின் மாஸ் ஸ்ட்டேடர்ஜி

 ஹாஸ்டல்

ஹாஸ்டல்

இவர்களின் பழக்கம், நாளடைவில் காதலாக மாறியது..2 பேரும் கல்யாணம் செய்ய முடிவெடுத்தனர்.. ஆனால், தான் குடும்பத்தாருடன் கோபித்து கொண்டு வந்துவிட்டதாகவும், தனக்காக திருமணத்தை பற்றி பேச யாருமே இல்லை, தான் ஒரு அனாதை என்றும் அபிநயா சொல்லவும், பரிதாபப்பட்ட நடராஜன், அபிநயாவை அளவுக்கு அதிகமாக விரும்பி திருமணம் செய்து கொண்டார்.. கடந்த ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ரங்கனாதபுரம் பெருமாள் கோவிலில், இவர்களின் திருமணம் நடந்துள்ளது.. ஆனால், அக்டோபர் 19ம் தேதி இரவு, பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த அபிநயா திடீரென காணாமல் போய்விட்டதால் பதறி போனார்..

மிஸ்ஸாயிடுச்சு

மிஸ்ஸாயிடுச்சு

இதனால் அதிர்ச்சி அடைந்து எங்கெங்கோ தேடி பார்த்தும், மனைவியை காணவில்லை.. செல்போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பிறகு பீரோவை திறந்து பார்த்தால், அங்கே 17 சவரன் நகையை காணவில்லை.. 20,000 ரொக்க பணமும் மிஸ்ஸிங்.. இதனால், நடராஜன், தாம்பரம் போலீஸ் ஸ்டேஷனில் மனைவியை காணோம் என்று புகார் தந்தார்.. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசாரும் தங்கள் விசாரணையை ஒவ்வொன்றாக ஆரம்பித்தனர்.. அப்போதுதான் அந்த பெண்ணின் மோசடிகள் ஒவ்வொன்றாக அம்பலமாக தொடங்கியது.. செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் அபிநயா தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது..

கல்யாணம்

கல்யாணம்

உடனே போலீசார் விரைந்து சென்று, அந்த லாட்ஜில் தங்கியிருந்த அபிநயாவை மடக்கி பிடித்து கைது செய்தனர்... அவரிடம் இருந்து 4 பவுன் நகையும் மீட்கப்பட்டது. பிறகு அபிநயாவிடம் விசாரணை ஆரம்பமானது.. அபிநயாவின் ஆதார் கார்டை கைப்பற்றி விசாரித்ததில், அந்த பெண்ணின் பெயர் அத்தனை நாளும் கயல்விழி என்றே பொய் ஏமாற்றி வந்தது தெரியவந்தது.. அபிநயா என்பதுதான் உண்மையான பெயராம்.. மேலும், அபிநயாவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி உள்ளது.. 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான். ஆனால், இதற்கு முன்பு, ஏற்கனவே 3 பேரை கல்யாணம் செய்துள்ளார் அபிநயா..

லாட்ஜ்

லாட்ஜ்

கடந்த 2011-ல் மன்னார்குடியை சேர்ந்த இளைஞருடன் முதல் திருமணம் நடந்தது.. ஜஸ்ட் 10 நாளிலேயே அவரை ஏமாற்றிவிட்டு ஓடிவந்துவிட்டார்.. பிறகு, மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார்.. அவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான்... அங்கிருந்து ஓட்டம் பிடித்த அபிநயா, கேளம்பாக்கத்தில் இன்னொரு இளைஞரை ஏமாற்றி திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார்..10 நாளில் அவரையும் உதறிவிட்டு ஊரப்பாக்கத்தில் தங்கி இருந்தபோது நடராஜனை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார்..

 ப்ளே A

ப்ளே A

அபிநயா வேலைக்காக ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும், அங்கு பழக்கமாகும் இளைஞர்களை குறி வைத்து கல்யாணம் செய்து, நகை-பணத்தை சுருட்டி கொள்வாராம்.. ஒவ்வொரு முறையும், இளைஞர்களை தன் வலையில் விழவைத்து, அவர்களை திருமணமும் செய்து, அவர்களிடம் இருந்து சுருட்டிக் கொண்டு போகும் பணம், நகைகளை, அபிநயா தன்னுடைய 2-வது கணவர் செந்தில்குமாரிடம் கொண்டு போய் தந்துவிடுவாராம்.. செந்தில்குமாரும், அந்த பணத்தை வைத்து ஜாலியாக செலவு செய்து வந்துள்ளார்... செந்தில்குமாருக்கு தெரிந்தே இவ்வளவும் நடந்துள்ளதையடுத்து, அபிநயாவுக்கு உடந்தையாக இருந்ததாக செந்தில்குமாரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.

 ப்ளே B

ப்ளே B

கைதான அபிநயா தன்னுடைய பெயரில் மொத்தம் 32 சிம்கார்டுகள் வாங்கி வைத்திருக்கிறாராம்.. ஒவ்வொரு இளைஞரிடமும் தனித்தனி செல்போன் நம்பரை கொடுத்து, அவர்களை வலையில் விழ வைத்துள்ளார்.. திட்டமிட்டும் ஏமாற்றி இருக்கிறார்... இதைதவிர, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சோஷியல் மீடியா மூலமும் அபிநயாவுக்கு பலரிடம் நெருக்கமான உறவு இருந்து வந்துள்ளதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கில் இளைஞர் ஒருவர் அறிமுகமாகி உள்ளார்.. அந்த நபர் துபாய் செல்வதற்கு, 2 பவுன் நகை மற்றும் பணத்தை அபிநயா தந்து உதவியுள்ளாராம்..

 ஸ்பெலிஸ்ட்கள்

ஸ்பெலிஸ்ட்கள்

புதிதாக அறிமுகமான இளைஞருக்கு, எதற்காக பணம் கொடுத்து அபிநயா உதவ வேண்டும்? என்ற விசாரணையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மதுரை அரிசிக்கார தெருவை சேர்ந்த அபிநயா, 10-ம் வகுப்பு வரை படித்துள்ளாராம்.. இவருடைய அப்பா அய்யப்பன், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அபிநயாவுக்கு 2011-ம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த விஜய் என்பவரை அவரது பெற்றோர் முறைப்படி கல்யாணம் செய்து வைத்துள்ளனர்..

டைவர்ஸ்

டைவர்ஸ்

ஆனால் தன்னைவிட விஜய்க்கு வயது அதிகம் என்று சொல்லி, அவருடன் தகராறு செய்த அபிநயா, ஒரு ஆண்டுக்குள் அவரை டைவர்ஸும் செய்துவிட்டாராம்.. அதற்கு பிறகுதான், சிவகங்கை பகுதியில் நகை கடையில் வேலை பார்த்தபோது, 2013-ம் ஆண்டு அதே கடையில் தன்னுடன் வேலை பார்த்த செந்தில்குமாரை 2வது திருமணம் செய்துள்ளார்.. பிறகு அவரையும் விட்டு பறந்துவிட்டார்.. இதனால் மகளை காணோம் என்று குடும்பத்தினர் போலீசுக்கு போயுள்ளார்கள்.. போலீசாரும் அபிநயாவை தேட துவங்கினர்.. அப்போதுதான், மதுரையில் அவருடன் கம்ப்யூட்டர் கிளாஸில் படித்த பிரபு என்பவருடன் ஒருவாரம் உல்லாச பயணமாக கேரளா சென்றது தெரியவந்தது.

மாயமாயிட்டாரு

மாயமாயிட்டாரு

பிறகு, 10 நாட்களில் அபிநயாவை கண்டுபிடித்து கொடுத்தனர். அதற்க பிறகு, சிவகங்கையில் இருந்து மதுரைக்கு வந்து வசித்து வந்தனர். அங்கு பிரபல தனியார் துணிக்கடையில் வேலை பார்த்தபோது, உதயா என்பவருடன் அபிநயாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவருடன் மாயமானார். மறுபடியும் மனைவியை காணோம் என்று செந்தில்குமார் போலீசுக்கு ஓடியுள்ளார்.. மதுரை திடீர்நகர் போலீசார் விசாரணை நடத்தி 2-வது முறையாகவும் அபிநயாவை கண்டுபிடித்து கொடுத்தனர். அதற்கு பிறகு 2020-ம் ஆண்டு மீண்டும் அபிநயா மாயமானார். ஆனால், இந்த முறை செந்தில்குமார் போலீசில் புகார் செய்யவில்லை...

 பேக்கரி பொண்ணு

பேக்கரி பொண்ணு

இதையடுத்து அபிநயா, சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி ஒரு செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். அப்போது ஆட்டோ டிரைவர் பன்னீர்செல்வம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 3-வதாக திருமணம் செய்து 10 நாட்கள் மட்டுமே அவருடன் இருந்தார். மீண்டும் அவரையும் ஏமாற்றி நகை, பணத்துடன் மாயமானார். ஆட்டோ டிரைவர் பல இடங்களில் தேடிய போதுதான் தாம்பரம்-முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் அபிநயா வேலை செய்வதை கண்டுபிடித்தார்.

உல்லாசம்

உல்லாசம்

ஆனால் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறி அவருடன் செல்ல அபிநயா மறுத்துவிட்டார். அப்போதுதான் அந்த பேக்கரிக்கு கோதுமை மாவு வினியோகம் செய்ய வந்த நடராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரை காதல் வலையில் வீழ்த்தி காதலிப்பதுபோல் நடித்து அவரை 4-வதாக திருமணம் செய்து கொண்டதும், பின்னர் நகை, பணத்துடன் ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது. 2-வது கணவர் உடந்தை நடராஜன் வீட்டில் இருந்து நகை, பணத்துடன் தப்பி ஓடிய அபிநயா, திருச்சியை சேர்ந்த அமீர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் 10 நாட்கள் தங்கி இருந்தார். அதன்பிறகு அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டார். இதற்கிடையில் அபிநயா நகை, பணத்துடன் மாயமான செய்திகள் மீடியாவில் வெளியானது.

லாட்ஜ்ஜூக்குள்

லாட்ஜ்ஜூக்குள்

இதை பார்த்த அவரது 2-வது கணவர் செந்தில்குமார், அபிநயாவை தொடர்பு கொண்டு தெரிவித்தார். பிறகு மீண்டும் 2-வது கணவருடன் சென்ற அபிநயா, அவர் மூலமாக அந்த நகையை விற்று உல்லாசமாக செலவு செய்து வந்தார். மீண்டும் அடுத்தகட்ட மோசடிக்கு தயாராக வேண்டி செம்மஞ்சேரி பகுதியில் பெண்கள் விடுதியில் தங்கி செல்போன் கடையில் வேலை பார்த்தபோதுதான் போலீசில் சிக்கிக்கொண்டார். முறைப்படி கல்யாணம் செய்தது மொத்தம் 4 பேரை என்றாலும், எத்தனையோ இளைஞர்களை அபிநயா ஏமாற்றி உள்ளார் என்கிறார்கள்.. பலருடன் உல்லாசமாகவும் வாழ்ந்து வந்துள்ளார்...

 மிரளும் போலீஸார்

மிரளும் போலீஸார்

இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், அபிநயாவை விசாரிக்க விசாரிக்க, அவருடன் பழக்கத்தில் இருந்தவர்கள், ஏமாந்தவர்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறதாம்.. இந்த பெண்ணின் கேடித்தனத்தை பார்த்து, போலீசாரே வாயடைத்து போய் நின்றுள்ளார்கள்.. இப்போதைக்கு நடராஜன் மட்டுமே போலீசில் புகார் செய்து உள்ளார்... இதே போல் நகை-பணத்தை இழந்தவர்கள் யார்? யார்? என்று கைதான அபிநயா, அவரது 2-வது கணவர் செந்தில்குமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்..!!

English summary
4 & 2 marriages and how did madurai Cheating woman arrested by Chennai Police
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X