வேங்கைவயல் உள்பட 4 கோரிக்கைகள்.. முதல்வர் ஸ்டாலின் - திருமாவளவன் சந்திப்பில் நடந்தது என்ன?
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் 4 முக்கிய கோரிக்கைகளையும் திருமாவளவன் முன்வைத்து இருக்கிறார். வேங்கை வயல் வழக்கில் நீதி விசாரணை ஆணையம், பட்டியல் சமூக அதிகாரிகளுக்கு பதவி உயர்வு சட்டம் உள்பட 4 கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார். முதல்வர் ஸ்டாலின் - திருமாவளவனுடனான இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. முதல்வருடனான சந்திப்பில் 4 முக்கிய கோரிக்கைகளையும் திருமாவளவன் முன்வைத்து இருக்கிறார்.

வேங்கை வயல் வழக்கில் நீதி விசாரணை ஆணையம், பட்டியல் சமூக அதிகாரிகளுக்கு பதவி உயர்வு சட்டம், பட்டியல் மற்றும் பழங்குடி சமூக தொழில் முனைவோருக்கு வணிக வளாகங்கள் ஒதுக்குதல், ஜாதி வன் கொடுமைகளை தடுத்தல் ஆகிய 4 கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினிடம் மனுவையும் திருமாவளவன் அளித்துள்ளார். முதல்வரை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் திருமாவளவன் இந்த தகவலை தெரிவித்து இருக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். தமிழ்நாடு காவல்துறை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் எனக் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையின் குற்றப்பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. மேல்விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் எனவும் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டு இருந்தார். வேங்கைவயல் விவகாரத்தில் காவல்துறையை சாடும் விதமாக திருமாவளவன் தொடர்ந்து பேசி வந்தார். இத்தகைய சூழலில்தான் திருமாவளவன் இன்று முதல்வரை சந்தித்து மனு அளித்து இருக்கிறார். இதற்கிடையே, வேங்கை வயல் விவகாரத்தில் ''ஒரு நபர் விசாரணை ஆணையம்" அமைக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதில் அவர் கூறியிருப்பதாவது:- எமது வேண்டுகோளையேற்று தாய்த்தமிழ்க் காத்தப்போராளிகள் நடராசன்- தாளமுத்து ஆகியோருக்கு சிலை நிறுவப்படும் என அறிவிப்புச் செய்துள்ள தங்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன், கடந்த நான்கு ஆண்டுகளாகப் பட்டியல் சமூக மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காக புரட்சியாளர் அம்பேத்கர், பண்டிதர் அயோத்திதாசர் பெயரிலான திட்டங்கள் உட்பட தாங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. அதற்காக எமது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம். இந்நிலையில் தங்களது மேலான பார்வைக்குப் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம்:
1) பட்டியல் சமூகத்தினருக்கென #வணிக_வளாகங்களை அமைத்துத் தர வேண்டும்:
அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம், நன்னிலம் திட்டம் எனத் தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தும் திட்டங்கள் சிறப்பான பலன்களைத் தந்துள்ளன. அந்தத் திட்டங்களுக்கான பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏதுவாகக் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுகிறோம். அத்துடன் பட்டியல் சமூகத்தினரை வணிகர்களாக வளர்த்தெடுக்கும் வகையில், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளில் வணிக வளாகங்களை அமைத்துத் தருவதற்குத் திட்டம் ஒன்றை அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2) #சாதிய_வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும்:
சாதி மற்றும் மத அடிப்படைவாத சக்திகளின் வெறுப்புப் பிரச்சாரத்தின் விளைவாக பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அதைக் கட்டுப்படுத்துவதற்கு சமூகநீதி சக்திகளின் ஒருங்கிணைந்த பிரச்சாரமும், காவல்துறையின் தீவிரமான நடவடிக்கையும் தேவை என்பதையே இது காட்டுகிறது. எனவே, சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த சட்டப்பூர்வமான உறுதிமிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
3) #வேங்கைவயல் வழக்கு - #நீதிவிசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் :
வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களையே குற்றவாளிகள் என சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருப்பது அம்மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. பெரும் அதிர்ச்சிக்குள்ளான அக்கிராமத்து மக்கள்,குற்றப்பத்திரிக்கையைத் திரும்ப் பெற வேண்டுமெனவும் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் வலியுறுத்தி தங்களின் குடியிருப்புப் பகுதியிலேயே அமைதியான முறையில் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, தற்போது சிபிசிஐடி தாக்கல் செய்திருக்கும் குற்ற அறிக்கையை இறுதியாகக் கருதாமல், இது தொடர்பாக தீர விசாரித்து உண்மையைக் கண்டறிய ஏதுவாக, நீதிவிசாரணைக்கு ஆணையிட வேண்டுமாறு கோருகிறோம். அதாவது, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் "ஒரு நபர் விசாரணை ஆணையம்" ஒன்றை அமைக்குமாறு விசிக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
4) பட்டியல் சமூகப் பிரிவினருக்குப் #பதவிஉயர்வில்_இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும்:
தமிழ்நாட்டில் நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த "200 பாய்ண்ட் ரோஸ்டர் முறையை" ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து
அந்த வழக்குக்குச் சற்றும் தொடர்பே இல்லாத பட்டியல் வகுப்பினரின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான பட்டியல் சமூகத்தைச் சார்ந்த அதிகாரிகளின் பதவிகள் இதனால் கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த அநீதியைத் தடுத்து நிறுத்த அரசமைப்புச் சட்ட உறுப்பு 16(4)(A)- இன் படி, மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனக் கடந்த நான்கு ஆண்டுகளாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர். விசிக சார்பிலும் தொடர்ந்து இக்கோரிக்கையை வலியுறுத்தி வருகிறோம். எனவே, பட்டியல் சமூக அதிகாரிகளின் நலன்களைக் கருத்தில் கொண்டு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி பதவி உயர்வுக்கான சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
Election Exclusive: வரம் கொடுத்த சாமி தலையில் கை வைத்த பிரேமலதா.. திமுக தொகுதிகளை கேட்டு அடம்! குட்டையைக் குழப்பு காங்.! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications