ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு போன 4 மாஜிக்கள்.. "ப்ளீஸ் எங்கியும் ஓடாதீங்க".. என்ன நடந்தது?
சென்னை: ஜாமீன் வாங்கி கொண்டு வீட்டில் இருக்கும் ராஜேந்திர பாலாஜியை 4 மாஜிக்கள் சந்தித்து உள்ளனர்.. இதுதான் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.
போலீசுக்கே தண்ணி காட்டி வந்த நிலையில், பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைதானார்.. சிறையிலும் அடைக்கப்பட்டார்.. அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இதனால், கடந்த 13-ந்தேதி விடுதலை செய்யப்பட்டார்... சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வீட்டில் இப்போதைக்கு தங்கி உள்ளார்...

புலம்பல்
தான் சிறையில் இருந்தபோது, தன்னை அதிமுக தரப்பில் யாருமே வந்து சந்திக்கவில்லை என்றும், பாஜக நிர்வாகிகள் செய்த உதவியைகூட அதிமுகவில் தனக்கு யாருமே செய்யவில்லை என்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ராஜேந்திர பாலாஜி புலம்பியதாக செய்திகள் கசிந்தன.. மேலும் ஓபிஎஸ்ஸுக்கு ராஜேந்திர பாலாஜி போனை போட்டதாகவும், ஆனால், அந்த போனை ஓபிஎஸ் அட்டண்ட் செய்யவில்லை என்றும் சொல்லப்பட்டன.

என்ன காரணம்?
இப்படிப்பட்ட சூழலில்தான், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார். சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜேந்திரபாலாஜியின் வீட்டுக்கு திடீரென நேற்று சாயங்காலம் சென்றுள்ளனர்.. அவர்கள் அனைவரையும் ராஜேந்திரபாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றிருக்கிறார்.

மாஜி அமைச்சர்கள்
பிறகு வீட்டிற்குள் சென்ற அவர்கள் ராஜேந்திரபாலாஜியிடம் மனம் திறந்து பேசியிருக்கிறார்கள்.. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு நடந்துள்ளது.. பிறகு அனைவருமே அவரவர் காரில் கிளம்பி சென்று விட்டார்களாம்.. இந்த சந்திப்பு எதிர்பாராத வகையில் திடீரென நடைபெற்றதாக அதிமுக நிர்வாகிகள் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.. ஆனால், இவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள், எதற்கான சந்திப்பு இது என்பது உறுதியாக தெரியவில்லை.

நாங்க இருக்கோம்
ஆனால், ராஜேந்திர பாலாஜியிடம் மாஜிக்கள் ஆறுதல் சொன்னார்களாம்.. "நாங்க இருக்கோம்.. பயப்பட வேண்டாம்... கடைசி வரை உங்களுக்காக போராடுவோம்... ஆனால், தயவுசெய்து ஓடி ஒளியாதீங்க.. அது நம்ம கட்சிக்குதான் கெட்ட பெயரை தரும்.. நம்ம கட்சிக்கு இது போதாத காலம்.. நாம அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்கள்.. பிறகு மெல்ல மெல்ல, டிராக்கை வேறு ரூட்டில் திருப்பி, "நாங்களும் இதே நிலைமையில் தான் இருக்கிறோம்.. எந்த நேரத்தில் எங்களுக்கும் இப்படியான செய்தி வருமோ?.. எப்படி சமாளிக்க போறோமே" என்று பயத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

ஆட்டம் ஆரம்பம்
இதை கேட்ட ராஜேந்திர பாலாஜி, "முதல்ல யாரும் பயப்படாதீங்க... பிரச்சனை வரும்போது நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று முன்னாள் அமைச்சர்களுக்கே தெம்பூட்டி அனுப்பி வைத்தாராம்.... ஆனாலும் இவர்கள் ஏன் ராஜேந்திர பாலாஜியை சந்தித்தனர்? எடப்பாடி, மற்றும் ஓபிஎஸ் இருவரும் என்ன நினைக்கிறார்கள்? என்பது பற்றிய தகவல்கள் இதுவரை இல்லை.. ஆனால், ராஜேந்திர பாலாஜியின் ஆட்டம் இனிமேல்தான் இருக்கும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி அறிவித்த எடப்பாடி! ஆனா 5 பவுன் நகை கடன் ரத்து இல்லையே! -
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்!












Click it and Unblock the Notifications