சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் உட்பட 4 பேர் பதவி நீக்கம்! நகராட்சி நிர்வாகத்துறை அதிரடி!
சென்னை: சென்னை மாநகராட்சியில் 2 கவுன்சிலர்கள் தாம்பரம் மாநகராட்சியில் ஒரு கவுன்சிலர் மற்றும் உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் ஆகியோர் உள்ளாட்சி விதிகளை மீறியதாக பதவி நீக்கம் செய்து நகராட்சி நிர்வாகத்துறை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 189வது வார்டு கவுன்சிலர் பாபு, 5வது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம், தாம்பரம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் ஜெயபிரதீப், உசிலம்பட்டி நகராட்சி தலைவரும் 11வது வார்டு கவுன்சிலருமான சகுந்தலா ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கவுன்சிலர்கள் சிலர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அவர்களில் தகுந்த விளக்கம் அளிக்காதவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் சென்னை மாநகராட்சியின் 5வது வார்டு கவுன்சிலர் கே.பி. சொக்கலிங்கம் (திமுக) 189வது வார்டு கவுன்சிலர் பாபு (திமுக) ஆகியோர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் மாநகராட்சி சுயேட்சை கவுன்சிலர் ஜெயபிரதீப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி தலைவர் சகுந்தலா தி.மு.கவை சேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications