தமிழ்நாட்டில் 4 புதிய மாநகராட்சிகள் உதயமானது.. முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.. மக்கள் மகிழ்ச்சி
சென்னை: புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி என 4 நகராட்சிகளும், மாநகராட்சிகளாக இன்று தரம் உயர்ந்துள்ளன.. 4 புதிய மாநகராட்சிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். இதையடுத்து, மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கின்றன.. இதில் வருவாய் மறறும், மக்கள் தொகையின் அடிப்படையில் சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல்நிலை என வரிசைபடுத்தப்பட்டு அதற்கேற்ப திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கப்பட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன..

குறிப்பாக, இவற்றில் பெரிய நகராட்சிகளை மட்டும் தனியாக பிரித்து, மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அந்தந்த மாவட்ட மக்கள், மற்றும் மாவட்டத்தின் பிரதிநிதிகள், தொடர்ந்து வேண்டுகோளை விடுத்து வருகின்றனர்.
அமைச்சர் உறுதி: அந்தவகையில், கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவை கூட்ட தொடரில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உள்ளாட்சி அமைப்புகளை தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்..
நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என அந்தந்த நகராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவை தமிழக முதலமைச்சரின் பரிசீலனைக்கு பிறகு மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி, திருவண்ணாமலை ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பேரவையில் அதிரடியாக அறிவித்திருந்தார்..
ஊராட்சிகள்: யாருடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையிலும் ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவோ நகராட்சிகளோ மாற்றப்படுவதில்லை. மக்கள் தொகை அதிகம் இருப்பதன் காரணமாகவே ஊராட்சிகள் தரம் உயர்த்தப்படுகின்றன என்றும், தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன அவை 159 ஆக உயரும் என்றும், 25 மாநகராட்சிகள் தற்போதுள்ள நிலையில் அவற்றின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.
காரைக்குடி: அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பிறகு, காரைக்குடி, நாமக்கல், புதுக்கோட்டை, திருவண்ணாமலை நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.. இந்த 4 நகராட்சி பகுதிகளுடன் கூடுதலாக சில ஊராட்சி பகுதிகளையும் இணைத்து மாநகராட்சியாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேலும் சிறப்பாக ஏற்படுத்தப்படும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
நம்பிக்கை: இந்த அதிரடி நடவடிக்கையானது பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருமே பயன்பெறும் வகையில் வாழ்க்கைத்தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி இதன்மூலம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த 4 புதிய மாநகராட்சிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சியின் வாயிலாக இன்று தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழ்நாட்டின் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications