கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும்! மோடிக்கு 4 மாநிலங்கள் தரப்போகும் ஷாக்.. என்ன இப்படி சொல்றாரே!
சென்னை: 2024 லோக்சபா தேர்தலில் நீங்கள் கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும் என்பதே கணிப்பு. பழைய மோடிக்கே இப்போது பேசும் மோடியின் பேச்சை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். தேர்தல் வெற்றிக்காக மோடி எந்த எல்லைக்கும் செல்வார் என்பது தெரிகிறது, என்று மூத்த பத்திரிகையாளர் மணி குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தானில் பேசிய மோடி, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள்.

இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது. "அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது,தேசத்தின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
கடுமையான சர்ச்சை; இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு தர போகிறீர்களா. இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள்.
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்த செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மங்களத்தை கூட விட்டுவைக்காது, என்று பிரதமர் மோடி கடுமையாக பேசி இருக்கிறார்.
மோடி பேச்சு விமர்சனம்; மோடியின் இந்த பேச்சு தொடர்பாக என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன் இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில், எனக்கு வந்த தகவலின்படி மாநில அரசுகள் மோடி மீது ஆக்சன் எடுக்க உள்ளன. மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் மோடி மீது எப்ஐஆர் பதிய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அப்படி எல்லாம் நடந்தால் அது அவலம், உதயநிதி ஸ்டாலின் மீது நாடு முழுக்க கேஸ் போட்டார்கள். அப்படித்தான் இதுவும்.
பிரதமர் மீது மாநில அரசு கேஸ் போடும் நிலை உள்ளது. அந்த அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டு உள்ளது. மோடி செய்தது பெரிய தவறு. அவர் செய்தது கிரிமினல் குற்றம். அதை பிரதமர் மோடியே செய்ய கூடாது. இப்படி எல்லாம் பேசிய பலர் மீது ஆக்சன் எடுக்கப்பட்டு உள்ளது. எனக்கு வந்த தகவல் இதுதான். மேற்கு வங்கம், ஜார்கண்ட், பீகார், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் மோடி மீது எப்ஐஆர் பதிய உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அப்படி செய்தால் என்ன ஆகும்? . குஜராத்தில் மோடி 2000ங்களில் செய்த அதே அரசியலை இப்போது செய்கிறார். உலகின் பல நாடுகள் மோடியின் பேச்சால் அதிர்ச்சி அடைந்து உள்ளன. காமென்வெல்த் நாடுகள் அதிர்ச்சி அடைந்து உள்ளன. ஆஸ்திரேலியா , ஜெர்மனி, அமெரிக்கா போன்றவை அதிர்ச்சி அடைந்து உள்ளன . இந்தியாவிற்கு இதெல்லாம் மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும். மோடிக்கு இது ஆபத்தாக மாறும்.
இந்தியாவிற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் நிலையை ஏற்படுத்தி உள்ளார். தேர்தல் நேரத்தில் மோடி மீது எப்ஐஆர் பதிவு செய்தால் அது மோடிக்கு பாசிட்டிவ் ஆகும் வாய்ப்புகளும் உள்ளன. இதை வைத்து செண்டிமெண்ட் தேட கூட பார்ப்பார். தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள மோடி நினைப்பார். அதனால் அவர் மீது இதுவரை ஆக்சன் எடுக்காமல் உள்ளனர்.
அவர் சும்மாவே நீலிக்கண்ணீர் நடிப்பார். இதில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். நீங்கள் கற்பனை செய்யாத விஷயங்கள் இனி நடக்கும் என்பதே கணிப்பு. பழைய மோடிக்கு இப்போது பேசும் மோடியின் பேச்சை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். தேர்தல் வெற்றிக்காக மோடி எந்த எல்லைக்கும் செல்வார் என்பது தெரிகிறது, என்று மூத்த பத்திரிகையாளர் மணி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications