சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

41 உறுப்பு கல்லூரிகள்.. இனி அரசு கல்லூரிகள் - தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஆணை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் இருக்கும் 41 உறுப்பு கல்லூரிகளை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், "தமிழ்நாட்டில் உள்ள 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் ரூ.152 கோடியே 20 லட்சம் செலவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

41 Affiliated colleges are converted into Government colleges - Tamilnadu govt

அதன்படி, 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை தோற்றுக்கப்பட்டது.

அவற்றுக்கான செலவினங்களுக்கு நிதி ஒப்புதல் வழங்கியும் ஆணைகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. மேலும் பல்கலைக்கழகங்களால் கூடுதலாக தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் பல்கலைக்கழகங்களுக்கே திருப்பி அனுப்பப்படும்.

மேலும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள் நிதிக்குழு ஒப்புதலின்றி உருவாக்கப்பட்டு இருப்பின், அந்த அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சார்ந்த பல்கலைக்கழகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்.. தமிழ்நாடு வரும் ஜெபி நட்டா.. காரைக்குடியில் முக்கிய ஆலோசனை!நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்.. தமிழ்நாடு வரும் ஜெபி நட்டா.. காரைக்குடியில் முக்கிய ஆலோசனை!

English summary
The Government of Tamil Nadu has issued an ordinance to convert 41 affiliated university colleges in Tamil Nadu into Government Arts and Science Colleges.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X