500 கி.மீ. தூரம் பயணித்து சென்னை வரும் சூப்பர் மிஷின்! வெள்ளத்தை சடாரென போக்கும்.. அசத்தல் டெக்னிக்
சென்னை: சென்னையில் வெள்ள நிவாரண பணிகளை துரிதப்படுத்த கோவையிலிருந்து 6 ராட்சச மோட்டார்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மிக்ஜாம் புயல் கரையை கடந்தாலும் சென்னையில் வெள்ள நீர் பெரும்பாலான இடங்களில் வடிந்த பாடில்லை. இதனால் மக்கள் உணவு, மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

செம்பரம்பாக்கம் ஏரி நீரை திறந்துவிட்டதால் பல இடங்களில் தண்ணீர் வந்துவிட்டதாக கூறப்படுகிறது. அது போல் புறநகர் பகுதிகளில் நாராயணபுரம் ஏரி உடைந்துவிட்டதால் ஏராளமான நீர் வெளியேறி பொதுமக்களின் குடியிருப்புகளை சூழ்ந்துக் கொண்டது.
வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 5 அடிக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இவை வடியாமல் இருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. பலர் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். தண்ணீரில் ஊறி போய் எங்கே வீடு இடிந்து விடுமோ என்ற அச்சமும் அவர்களுக்கு உள்ளது.
இந்த நிலையில்தான் கோவையில் சூப்பர் பவர் கொண்ட மோட்டார் வரவழைக்கப்பட்டுள்ளது. மோட்டார் மற்றும் பம்புகள் உற்பத்தியில் முன்னணி நகரமாக கோவை விளங்குகிறது. இங்கிருந்து விவசாய பணிகள் உள்ளிட்டவைகளுக்கு பலர் மோட்டார்களை வாங்கிச் செல்கிறார்கள். கோவை தொழில் நகரம் என துணி ஆலைகளை வைத்து மட்டும் சொல்லவில்லை.
இது போன்ற மோட்டார் உற்பத்தி ஆலைகள் இருப்பதை வைத்தும்தான் சொல்லப்படுகிறது. அது போல் வித்தியாசமான பொருட்களையும் இங்கு தயாரிக்கிறார்கள். உதாரணமாக சிறிய அளவில் போர்டபிள் சைஸ் வாட்டர் ஹீட்டர், வாட்டர் கேனில் குடை உள்ளிட்ட வித்தியாமான பொருட்களும் கிடைக்கின்றன.
கோவை தனியார் நிறுவனங்களிடம் இருந்து 6 மோட்டார்கள் வாங்கப்பட்டு அவை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மோட்டார்களை சென்னைக்கு அனுப்பி வைத்தது இல்லாமல் அவரும் களத்தில் இறங்கி நிவாரணங்களை செய்ய சென்னைக்கு வந்துள்ளார்.
6 ராட்சத மோட்டார்களும் 10 சிறிய மோட்டார்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 32 கிலோ வாட்ஸ், 41 HP திறன் கொண்ட இந்த மோட்டார்கள் தண்ணீரை வேகமாக வெளியேற்றும் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே என்எல்சியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மிதக்கும் ராட்சத மோட்டார் மூலம் ஒரு நிமிடத்திற்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றி வருகிறது.
கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் சென்னை வடக்கு மண்டல துணை கமிஷனராக இரு ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். ஏற்கெனவே வெள்ளம் பாதித்த போது பணியாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது என்பதால் இவர் கோவையிலிருந்து கிளம்பி சென்னைக்கு வந்திருக்கிறார். இவர் தற்போது வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications