கொரோனாவால் ஒரே நாளில் 44 பேர் மரணம்.. என்ன காரணத்தால் அதிகம் பேர் பலி. பரபர பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுகாதாரத்துறை ஜுன் 15 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தான் ஒரு நாளில் தமிழகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட உச்சகட்ட உயிரிழப்பு ஆகும்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. தினமும் 1800க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்து வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 1500 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி 46,504 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதை போல் உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களில் சுமார் 150 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகம்

சென்னையில் அதிகம்

கொரோனாவால் உயிரிழந்த 479 பேரில் 382 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். செங்கல்பட்டில் 27 பேர், திருவள்ளூரில் 27 பேர், காஞ்சிபுரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதாவது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள 4 மாவட்டங்களைச் சேர்ந்த 443 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பலி எண்ணிக்கை எப்படி

பலி எண்ணிக்கை எப்படி

தமிழகத்தின் பிற பகுதியில் மொத்தம் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று கொரோனாவால் உயிரிழந்த 44 பேரில், 36 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். சென்னை தவிர திருவள்ளூரில் 4 பேரும், செங்கல்பட்டில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். இது தவிர கிருஷ்ணகிரியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று கொரோனாவால் உயிரிழந்த பலரும் வயதானவர்கள் மற்றும் வேறு சில நோய் தொற்று பாதிப்பு உள்ளவர்கள் ஆவர்.வேறு சில நோய் தொற்று பாதிப்புடன் கொரோனாவும் பாதித்ததால் உயிரிழந்துள்ளனர்.

அறிகுறி இல்லாமல் பலி

அறிகுறி இல்லாமல் பலி

தமிழகத்தில் நேற்று உயிரிழந்த 44 பேரில் 34 வயது ஆண், 44 வயது ஆண், 41 வயது ஆண், 45 வயது ஆண், 47 வயது பெண், 39 வயது ஆண், 42 வயது ஆண், 41 வயது ஆண் என 8 பேர் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 முதல் 5 நாட்களில் இறந்தவர்கள் என்பது அதிர்ச்சி தரும் தகவல் ஆகும்.

இன்றைய மரணம்

இன்றைய மரணம்

நேற்று கொரோனாவால் உயிரிழந்த 44 பேரில் 34 பேர் 650 வயதை கடந்தவர்கள் ஆவர். பெரும்பாலானோர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். நேற்றைய இறப்புகளுக்கு சுவாசிப்பதில் தோல்வி, கோவிட் நிமோனியா, இருதய நுரையீரல் அடைப்பு போன்றவை முக்கிய காரணமாக இருந்தது. குறிப்பாக 32 வயது, 34 வயது, 45 வயது, 41 வயது ஆகிய இளம் வயது நபர்கள் இறக்க சுவாசிப்பதில் ஏற்பட்ட தோல்வி முக்கிய காரணமாகும். மற்றவர்கள் இறக்க ஆக்ஸிஜன் பற்றாக்குறை, நீரழிவு, ரத்த அழுத்தம், நுரையீரல் அடைப்பு, சிறுநீரகம் செயல் இழப்பு போன்றவையும் இறக்க காரணமாக இருந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+