அந்த 45 நிமிடம்.. எடப்பாடிக்கு இடியாய் வந்து இறங்கிய பிரச்சனை.. நீங்களே இப்படி பண்ணலாமா? போச்சு
சென்னை: அதிமுக சீனியர்களுக்கு எடப்பாடி விளக்கம் தந்துள்ள விவகாரம் கட்சியின் மேல்மட்டத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கட்சியின் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் மகனின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு விட்டு கோவை ஏர்போர்ட்டுக்கு சென்றார் எடப்பாடி பழனிச்சாமி.
ஏற்போர்டில் இருந்த பாஜகவின் முன்னாள் தலைவரும், மகாராஸ்ட்ரா கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோரை சந்தித்தார் எடப்பாடி. கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அந்த சந்திப்பு நீடித்துள்ளது. இந்த சந்திப்பு குறித்து அரசியல் மற்றும் கூட்டணி ரீதியாக பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், அது பற்றி எடப்பாடியிடம் சீனியர் நிர்வாகிகளான கே.பி. முனுசாமி, ஜெயக்குமார் ஆகியோர் விசாரித்திருக்கிறார்கள்.

பாஜக பற்றியெல்லாம் கேட்காதீங்க
குறிப்பாக, பாஜக கீஜாக பத்தியெல்லாம் எதுவும் கேட்காதீங்க. கூட்டணி பற்றியெல்லாம் டிசம்பரில் தான் சொல்லப்படும் என நீங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னீங்க. அப்புறம், கட்சி நிர்வாகிகளுக்கு பாஜகவுடன் கூட்டணி வரும் என பொதுவெளியில் யாரும் பேட்டிக்கொடுக்கக்கூடாது என உத்தரவு போட்டீர்கள். இப்போ நீங்களே பாஜகவினரை சந்திப்பதும், அவர்களுடன் விவாதிப்பதும் சரியா? நீங்களே இப்படி இருந்தால் எப்படி? என்று கே.பி.எம்.மும் ஜெயக்குமாரும் எடப்பாடியிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு எடப்பாடி, ''ஏர்போர்ட்டில் எனக்காகவெல்லாம் அவர்கள் காத்திருக்கவில்லை. அவர்கள் செல்லும் ப்ளைட்டுக்காக காத்திருந்தனர். ஏர்போர்டில் அவர்களை பார்க்கும் போது பேசாமல் இருப்பது நல்லாவா இருக்கும்? நலம் விசாரித்துக் கொண்டோம். கூட்டணியை பத்தியோ, பாஜகவை பத்தியோ எந்த பேச்சும் நடக்கவில்லை.
நயினார் சந்திப்பு
அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு நீங்கள் போயிருக்கக்கூடாது என நயினார் சொன்னார். ஆனால், அந்த கூட்டத்தை நீங்கள் புறக்கணித்திருக் கக்கூடாது. கலந்து கொண்டிருக்க வேண்டும். கூட்டத்தின் பொருளில் உங்களுக்கு எதிர்ப்பு இருந்தால் அதனை கூட்டத்திற்கு வந்து பதிவு செய்திருக்க வேண்டும்னு நான் வலியுறுத்தினேன். மற்றபடி, பட்ஜெட் தாக்கல் ஆக போகிறது. எந்த நல்ல விசயங்களும் அதில் இருக்கப்போவதில்லைன்னு பொதுவாக பேசிக்கொண்டோம். வேறு எதுவும் நடக்கவில்லை'' என்று விளக்கம் தரும் வகையில் பதில் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
அதிமுக பாஜக கூட்டணி
ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு பின் கேரளாவை சேர்ந்த தமிழக புள்ளி ஒருவரின் தலையீடுதான் காரணம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக கூட்டணி உருவாகாத நிலையில், தற்போது மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
மீண்டும் சேரும் அதிமுக - பாஜக
பாஜக, அதிமுக இரண்டும் மாறி மாறி கூட்டணிக்கு தூதுவிட தொடங்கி உள்ளன. திமுகதான் எதிரி; வேற எந்த கட்சியுமே எதிரி இல்லை; திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறவே கூடாது என அதிரடியாக யோசிக்க முடியாத அளவிற்கு பல்டி அடித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
இன்னொரு பக்கம் அண்ணா திமுக எங்களுக்கு எதிரியே இல்லை..திமுகதான் எங்கள் ஒரே எதிரி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார். இதனால் 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் அண்ணா திமுக- பாஜக கூட்டணி அமையும் என்றே கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழகம் தனித்து விடப்படுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications