மணி பிளாண்ட் வைக்க 5 சரியான இடங்கள்.. இந்த இடத்தில் மட்டும் வெச்சிடாதீங்க.. செல்வம் சேராது
சென்னை: மணி பிளாண்ட் செடிகள், வீட்டின் அழகை மெருகூட்டுவதோடு மட்டுமல்லாமல், மருத்துவ நன்மைகளையும் வாரி வழங்கக்கூடியவை. வாஸ்து சாஸ்திர ரீதியாக மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. எதிர்மறை ஆற்றல்களை ஈர்த்துக்கொண்டு, நேர்மறை அதிர்வுகளை இல்லத்தில் நிறையச் செய்யும் அற்புதமான ஆற்றல் இந்தச் செடிகளுக்கு உண்டு. முறையாகப் பராமரிக்கப்படும் மணி பிளாண்ட், வீட்டில் உள்ள கடன் பிரச்சனைகளைத் தீர்த்து, நிரந்தரச் செல்வம் வந்து சேர வழிவகுக்கும் என்பது பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த செடிகளை வீட்டில் எப்படி பராமரிப்பது?
மணி பிளாண்ட் வளர்ப்பதில் திசைகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. வாஸ்து நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தச் செடியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைப்பதே சிறந்தது.

மணி பிளாண்ட் நன்மைகள்
ஏனெனில் இந்த பகுதி விநாயகருக்கு உரிய இடமாகவும், சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த திசையாகவும் கருதப்படுகிறது. இதனால் அதிகப்படியான நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையும்.
மாறாக, வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். வடகிழக்கில் வைத்தால் பண இழப்பு ஏற்படுவதோடு, குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். அதேபோல், கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் நடுவதும் அசுபமாகக் கருதப்படுகிறது; இது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
இந்தச் செடியை வளர்க்கும்போது குடுவைகளை விட மண் தொட்டிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. தரையில் மண் தொட்டியில் வைத்து வளர்க்கும்போது அதன் வேர்கள் நன்றாகப் படர்ந்து வளர வாய்ப்பு கிடைக்கும். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், செடியை தரையில் படர விடக்கூடாது.
மணி பிளாண்ட் எந்த திசையில் வைக்கலாம்
ஒரு கயிற்றின் மூலமாகவோ அல்லது குச்சியின் உதவியுடனோ மேல்நோக்கிப் படர விடுவதே முறையானது. செடியின் இலைகள் எந்த அளவுக்கு அடர்த்தியாக வளருகிறதோ, அந்த அளவுக்குக் குடும்பத்தில் பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
பராமரிப்பு விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. செடியில் உள்ள இலைகள் பழுக்கவோ அல்லது காயவோ ஆரம்பித்தால், அவற்றை உடனே வெட்டி அகற்ற வேண்டும். பழுத்த இலைகள் இருப்பது உடல்நலக் குறைவின் அறிகுறியாக கருதப்படுகிறது. அதேபோல், அதிக சூரிய ஒளி இல்லாமலேயே இது வளரும் என்பதால் வீட்டின் உட்புறத்திலேயே வைத்துப் பராமரிக்கலாம்.
பண வரவை ஈர்க்க சில எளிய பரிகாரங்களும் உண்டு. மணி பிளாண்ட் வைத்துள்ள மண் தொட்டிக்குள் ஒரு ரூபாய் நாணயத்தைப் புதைத்து வைக்கலாம்.
மணி பிளாண்ட் செல்வம், பணம் வரவு
தினமும் தண்ணீர் ஊற்றும்போது பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்தபடி ஊற்றுவது சிறந்தது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் தண்ணீருடன் இரண்டு கரண்டி காய்ச்சாத பாலையும் கலந்து ஊற்றினால் பணக்கஷ்டம் நீங்கும். மகாலட்சுமிக்கு உகந்த பாலினை வெள்ளிக்கிழமை பூசைக்குப் பிறகு செடிக்குச் சமர்ப்பிப்பதன் மூலம் வறுமை நீங்கி வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.
மணி பிளாண்ட் செடியை பராமரிக்கும் போது மற்றவர்களுக்கு இந்தச் செடியை தானமாகவோ அல்லது பரிசாகவோ கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. உங்கள் வீட்டிலுள்ள செடியின் ஒரு பகுதியை மற்றவர்களுக்குக் கொடுப்பது, உங்கள் வீட்டின் அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் மற்றவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு சமமாக கருதப்படுகிறது.
வாஸ்து டிப்ஸ்
அதேபோல், இந்தச் செடி எப்போதும் பசுமையாகவும் செழிப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்; செடி வாடினால் அது பொருளாதாரத் தேக்கத்தைக் குறிக்கும் என்பதால் அவ்வப்போது தேவையற்ற காய்ந்த கிளைகளை நீக்கிப் பராமரிக்க வேண்டும். செடியின் கொடி எப்போதும் கீழ்நோக்கித் தொங்காமல், மேல்நோக்கி ஏறிச் செல்லும்படி கட்டிவிடுவது குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும், வருமானம் உயருவதற்கும் வழிவகுக்கும் மிக முக்கியமான நுணுக்கமாகும்.
இவ்வாறு முறையான திசையில் வைத்து, பக்தி மற்றும் அக்கறையுடன் பராமரித்து வந்தால், மணி பிளாண்ட் ஒருபோதும் செல்வச் செழிப்புக்குக் குறை வைக்காது என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்..!!!












Click it and Unblock the Notifications