டெங்கு காய்ச்சல்.. சென்னையில் 5 பேருக்கு பாதிப்பு.. தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கோரிக்கை
சென்னை: சென்னை வளசரவாக்கம் பகுதியில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வளசரவாக்கம் மண்டலத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னையில் பலருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வளசரவாக்கம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 5 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்
காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, மற்றும் தோல் அரிப்பு ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள். இவற்றில் ஒருசிலவோ, அல்லது அனைத்து அறிகுறிகளுமோ ஏற்படலாம். அறிகுறிகள் இல்லாமலும் டெங்கு காய்ச்சல் ஏற்படக்கூடும்.
பருவமழை தொடங்கி உள்ளதையொட்டி அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பேரிடர் மீட்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தி முடித்துள்ளனர். மேலும், சுகாதாரத்துறை சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு, அனைத்து துறைகளுக்கும் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க
குறிப்பாக, பருவமழை காலங்களில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுவதை தடுப்பது, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கையாக மழைக்காலங்களில் கொசுக்கள் உற்பத்தியாகி அதன்மூலம் டெங்கு, மலேரியா நோய்களை கட்டுப்படுத்தும் விதமாகவும் டெங்கு காய்ச்சல் பொது மக்களுக்கு வராமல் பாதுகாத்து கொள்ள வழிமுறைகளை பின்பற்ற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
டெங்கு காய்ச்சல், ஏடிஸ் என்னும் கொசு கடிப்பதால் பரவுகிறது. இந்தக் கொசுவானது சுத்தமான நீரில் வீட்டில் பயன்படுத்தப்படும் குடங்கள், பாத்திரங்களிலும் வீட்டை சுற்றி இருக்கும் தேவையற்ற பொருட்களான பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், பயன்படுத்தப்படாத டயர்கள், உடைந்த பானைகளில் காணப்படும் மழைநீரிலும் உற்பத்தியாகிறது.
ஏடிஸ் கொசு உற்பத்தியை கட்டுப்படுத்திட ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தும் அனைத்து நீர் வைத்திருக்கும் கலன்களை மூடி வைப்பதுடன் கழுவி சுத்தம் செய்திட வேண்டும். மேலும் வீட்டிலுள்ள மேல்நிலை தொட்டி மற்றும் தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் உள்ள நீரினை கொசு புகா வண்ணம் மூடி வைப்பதுடன் வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்திட வேண்டும்.
நீர் தேங்காமல்
வீட்டில் உள்ள குளிரூட்டிகள், குளிர் சாதனப் பெட்டியின் பின்புறம் தொடர்ந்து நீர் இல்லா வண்ணம் பராமரிக்க வேண்டும், வீட்டை சுற்றி தேவையற்ற பொருள்களான பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், பயன்படுத்தப்படாத டயர்கள், உடைந்த பானைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தி ஆகாமல் இருக்க அப்புறப்படுத்த வேண்டும்.
வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவுகளில் திரைச்சீலைகள் மற்றும் கொசு வலைகளை கொண்டு வீட்டின் உள் கொசு உள்ளே வருவதை தடுத்திட வேண்டும். காலை மாலை நேரங்களில் கொசு கடிக்காமல் இருப்பதற்கு நீண்ட முழுக்கை சட்டை, நீண்ட கால்சட்டை அணிந்து கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி உள்ள செடிகள், புதர்களை அகற்றி சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதுடன் மழைநீர் தேங்காமல் பராமரித்திட வேண்டும்.
கொசு ஒழிப்பு பணியாளர்கள் தங்கள் வீட்டிற்கு வரும்பொழுது முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். வீட்டில் யாரேனும் காய்ச்சல் பாதிப்பு அடைந்தால் உடனடியாக அரசு மருத்துவமனை 'மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரை அணுகி ஆலோசனை மற்றும் சிகிச்சை பெறுதல் வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications