5 சம்பவங்கள்.. ஆளுநர் டெல்லி போன நேரம் பார்த்து.. அதிமுக செய்த பெரிய மூவ்.. உற்று பார்க்கும் திமுக!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ரவி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்தான் அதிமுக சார்பில் திமுகவிற்கு எதிராக டெல்லியில் புகார் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் விவகாரமும் அது தொடர்பான அரசியலும் மீண்டும் கவனம் பெற தொடங்கி உள்ளது. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி இன்னும் ஏற்காத நிலையில் ஆளும் தரப்பிற்கும் திமுகவிற்கும் இடையில் மோதல் அதிகரித்துள்ளது.
ஆளுனர் ரவிக்கு அழுத்தம் கொடுத்து எப்படியாவது நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் பெறலாம் என்று திமுக முயன்று வருகிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

சம்பவம் 1 - தொடர் நெருக்கடி
நீட் விவகாரத்தில் திமுக தொடர்ந்து ஆளுநருக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் அனுப்பியது. மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. வில்சன் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்தார். அதில், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று மசோதா கொண்டு வந்தார். ஏன் முதல்வர் ஸ்டாலின் கூட ஆளுநருக்கு எதிராக டெல்லி மற்றும் கேரளாவில் பேசினார்.

விஷயம் 2 - ஆளுநர் கவனம்
இது ஒரு பக்கம் இருக்கத்தான்.. ஆளுநர் தரப்பிற்கு இன்னொரு விஷயம் குறித்த தகவலும் சென்றதாக கூறப்படுகிறது. சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தி மண்டபத்தில் ஆளுநர் ரவி கடந்த சில நாட்களுக்கு முன் வழிபாடு நடத்தினார். தனக்கு நெருக்கமான சிலருடன் சென்று அவர் அங்கு வழிபாடு நடத்தினார். அவர் வழிபாடு நடத்தி 5 நாட்களில் அயோத்தி மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றது. இது தனி நீதிபதி கொடுத்த உத்தரவின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகும். இருந்தாலும் அதில் தமிழ்நாடு அரசு சரியாக ஆளுநர் சென்று 5 நாட்களில் இந்த நடவடிக்கையை எடுத்தது. அரசின் இந்த நடவடிக்கை ஏன் இப்போது எடுக்கப்பட்டது.. coincincidence அல்லது வேறு ஏதாவதா என்று ஆளுநர் தரப்பு ஆராய்ந்து வருகிறதாம்.

விஷயம் 3 - ஆளுநரிடம் முறையீடு
இந்த நிலையில் ஆளுநரிடம் சிதம்பரத்தில் கோவில் நிர்வாகிகள் சிலர் அறநிலையத்துறை பற்றி பேசி இருப்பதாக கூறப்படுகிறது. கோவில் கட்டுப்பாட்டை அறநிலையத்துறை எடுக்க பார்க்கிறது. இதற்காக சட்டம் இயற்ற பார்க்கிறார்கள். அப்படி செய்தால் அதை ஏற்க கூடாது என்று அதை ஆளுநர் ஏற்க கூடாது. இதை பற்றி டெல்லியில் பேசுங்கள், என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதை காதில் வாங்கிக்கொண்ட ஆளுநர் தரப்பு அங்கு இருந்தவர்களுக்கு நம்பிக்கை அளித்ததாக கூறப்படுகிறது.

விஷயம் 4 - கருப்பு கொடி
இதெல்லாம் அடுத்தடுத்து நடந்த போதுதான் மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. ஆளுநர் ரவி வருகையை எதிர்த்து திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த நிலையில்தான் நேற்று ஆளுநர் கான்வாய் மீது கல் வீச்சு நடைபெற்றதாக பரபரப்பு புகார் எழுந்தது. ஆனால் பின்னர் தமிழ்நாடு போலீஸ் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. போலீசார் அங்கு இருந்ததால் கல் வீச்சு சம்பவம் தடுக்கப்பட்டது என்று போலீசார் விளக்கம் அளித்தனர்.

விஷயம் 5 - அண்ணாமலையோ புகார்
இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுனர் ரவியின் உயிருக்கு ஆபத்து என்று புகார் வைத்துள்ளார். ஆளுநரின் கார் மீது கல்லை வீசி உள்ளனர். கொடி கம்பத்தை வீசி தாக்கி உள்ளனர். ஆளுநர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேட்டரே வேறு
ஆனால் டெல்லி செல்லும் ஆளுநரோ இதை பற்றி பேச வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தல், நீட் விவகாரம் இதை பற்றித்தான் ஆளுநர் பேசுவார் என்று கூறப்படுகிறது. கருப்பு கொடி விவகாரம் பற்றி பேசினாலும் அதை பற்றி பெரிதாக விவாதிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர். என் ரவி ஒப்புதல் அளிக்க போவதாக ஊடகங்களில் செய்தி வந்தது. இது தொடர்பாக பேச உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ரவி நேரம் கேட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

டெல்லி பயணம் - அதிமுக குறி
ஆளுநர் ரவி இப்படி டெல்லி சென்று இருக்கும் நிலையில்தான், அதிமுக இங்கு இன்னொரு பெரிய மூவை செய்துள்ளது. ஆளுநர் ரவி டெல்லியில் உள்ள நேரம் பார்த்து, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உயிருக்கு அச்சுறுத்தல் என அதிமுக புகார் மனு அளித்துள்ளது. திமுக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 4 பக்கங்களுக்கு இந்த புகார் எழுதப்பட்டு உள்ளது.

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து சம்பவம்
ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த திடீர் மூவ் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் ஆளுநர் ரவி பயணம், இன்னொரு பக்கம் அண்ணாமலை புகார், இன்னொரு பக்கம் அதிமுகவின் மனு என்று அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்கள் நடந்து உள்ளன. இவை அனைத்தையும் திமுக தீவிரமாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து பல்வேறு மூவ்கள் மேற்கொள்ளப்படுவதை திமுக தரப்பு தீவிரமாக கவனித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications