ரயிலில் பட்டாசு கொண்டு செல்ல தடை.. விதி மீறினால் தண்டனை.. தமிழக ரயில் நிலையங்களில் செக்கிங்
சென்னை: பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்களில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது.
தீபாவளி என்றாலே பட்டாசுதான். பட பட வென வெடிச்சத்தம் கேட்டால்தான் தீபாவளி கொண்டாட்டம் களை கட்டும். தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை 12ஆம் தேதி நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை, கோவை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். சிறப்பு ரயில்களும், சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

பணியாற்றி வரும் ஊர்களில் இருந்து பட்டாசுகளை வாங்கி சொந்த ஊருக்கு எடுத்து செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விதிகளை மீறி ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இரயில் நிலையங்களில் 1,300 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தடையை மீறி பட்டாசுகளை எடுத்துச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள ரயில்வே காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் நிலையங்களில் கூடுதல் ரயில்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பட்டாசுகளை விற்பனைக்காக கொண்டு செல்கின்றனரா என ஓடும் ரயில்களில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். பயணிகளின் உடைமைகளைச் சோதனை செய்த பின் ரயில்வே ஸ்டேஷனுக்குள் அனுமதிப்போம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரயிலில் பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களைக் கொண்டு செல்லக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். பயணிகள் பட்டாசுகளை ரயில்களில் எடுத்துச் சென்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications