என் புள்ள மண்டையை முடியோடு பிடித்து தனியே எடுத்த நாய்கள்.. சாக கிடக்கும் மகள்.. தந்தை கண்ணீர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தையின் பின்னந்தலையை அப்படியே முடியோடு பிடித்து இழுத்து தனியாக அந்த நாய்கள் எடுத்துவிட்டன, என் குழந்தை சாகும் நிலையில் இருக்கிறது என்று குழந்தையின் தந்தை ரகு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் மாடல் பூங்காவில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் ரகு. இவரது மனைவி சோனியா. இவர்களுக்கு சுதிக்ஷா என்ற 5 வயது பெண் குழந்தை உள்ளது.

5 years old girls father explains about dog bite in Chennai thousand lights park

இந்த குழந்தை நேற்று முன் தினம் இரவு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு புகழேந்தி என்பவருக்கு சொந்தமான ராட்வைலர் நாய்கள் பூங்காவுக்குள் வந்தன. அப்போது அங்கிருந்த சிறுமியை கடித்து குதறின. அப்போதும் அந்த நாயை தடுக்காமல் புகழேந்தி தூரமாக ஓடிவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஆபத்தான நிலையில் குழந்தை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை ரகு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என் குழந்தை பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தது. என் மனைவி வெளியே சாமான் கழுவிக் கொண்டிருந்தார். அந்த 2 நாய்களும் என் குழந்தையை கடித்ததால் என் புள்ளை சாகும் நிலையில் இருக்கிறது.

குழந்தையின் நிலையை பற்றி சொல்லவே முடியவில்லை. என் புள்ள சாகும் நிலையில் இருக்கிறது. என்னை உள்ளே விட மாட்டேங்கிறார்கள். என் குழந்தையை நாய்கள் கடித்த போது அந்த உரிமையாளர் ஓடிவிட்டார்.

அந்த நாய்களின் உரிமையாளரை கைது செய்யவே இல்லை. எங்களுக்கு பணம் காசு எல்லாம் வேண்டாம், நான் பெற்ற பிள்ளையை நல்லபடியாக கொடுத்தாலே போதுமானது. என் குழந்தைக்கு வியாழக்கிழமை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

வெளிநாட்டில் இருந்து மருத்துவர்களை அழைத்து வருகிறார்கள். குழந்தையை காப்பாற்றிவிடலாம் என சொல்லிவிட்டார்கள். என் மனைவியும் நன்றாக இருக்கிறார். குழந்தையின் மண்டையில் முடியுடன் அப்படியே எடுத்துவிட்டது.

இரு தொடைகளையும் குதறிவிட்டுள்ளது. குழந்தையின் மண்டையை டிபன் பாக்ஸ் மூடி போல் அந்த நாய்கள் கடித்து திறந்துவிட்டன. குழந்தையின் மண்டையில் அந்த பாகத்தை அப்படியே தையல் ஏதும் போடாமல் வைத்துள்ளார்கள். குழந்தையை நாய் கடித்த போது நான் விழுப்புரத்தில் இருந்தேன், அதுதான் என் சொந்த ஊர் என தந்தை தெரிவித்தார்.

இதுகுறித்து குழந்தையை காப்பாற்றிய மதன் என்பவர் கூறுகையில் நான் என் வீட்டில் இருந்த போது குழந்தை அலறும் சப்தம் கேட்டது. உடனே நான் போய் பார்த்த போது குழந்தையை கட்டி பிடித்து கொண்டு அவருடைய தாய் அந்த நாயுடன் போராடிக் கொண்டிருந்தார்.

அந்த நாய் அவரையும் கடித்தது. உரிமையாளர்கள் அதை தடுக்காமல் ஹேய் ஹேய் என அதட்டினர். நான் உடனே அந்த குழந்தையின் கால்களை பிடித்து இழுத்து வெளியே தூக்கி வந்துவிட்டேன். குழந்தையை கிட்டதட்ட 15 நிமிடங்களாக கடித்தது. நான் கொண்டு வந்து அரசு மருத்துவமனையில் சேர்த்தேன். பிறகு நாய்க்கு உரிமையாளர்கள் அந்த குழந்தையை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்குமாறும் அதற்கான செலவை ஏற்பதாகவும் கூறினர். அதனால் அப்பல்லோவில் சேர்க்கப்பட்டுள்ளார் என மதன் தெரிவித்தார்.

அந்த நாய்களுக்கு புகழேந்தி சங்கிலி ஏதும் கட்டாமல் அப்படியே அழைத்து வருவார் என்றும் பல முறை அவரிடம் சொல்லியும் கடிச்சா நான் பார்த்துக்கிறேன், நான் செலவு செய்துக்குறேன் என்று ஆணவமாகவே பதில் அளிப்பார் என அப்பகுதியினர் சொல்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+