தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா உறுதி.. சுகாதாரத் துறை புல்லட்டின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மேலும் 508 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,38,340 பேராகும்.

Recommended Video

    #Covid-19update தமிழகம்: இன்று கொரோனா பாதிப்பு சற்று கூடுதல்!

    தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் பரவிய கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல பாதிப்பு குறைந்து பாதிப்பு எண்ணிக்கை 5 இலக்கத்திலிருந்து 3 இலக்கத்திற்கு வந்துள்ளது.

    508 were affected by Corona virus in Tamilnadu

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாநில சுகாதாரத் துறை இன்றைய தினம் செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இன்று 508 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 8,38,340 பேராகும். இன்று ஒரே நாளில் 54,043 சளி மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,60,19,962 சேம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன.

    அது போல் இன்று ஒரே நாளில் 53,869 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,57,08,590 பேருக்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று ஒரே நாளில் 316 ஆண்களுக்கும் 192 பெண்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

    தமிழகத்தில் 254 கொரோனா சோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 523 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர். இதுவரை 8,21,430 பேர் வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகளில் 4,554 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இன்று ஒரே நாளில் 6 பேர் பலியாகிவிட்டனர். இதுவரை கொரோனாவிலிருந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 12,356 பேராகும். இன்று சென்னையில் மட்டும் 141 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரியலூரில் 3 பேருக்கு செங்கையில் 38 பேருக்கும், கோவையில் 53 பேருக்கும், கடலூரில் 9 பேருக்கும் திண்டுக்கல்லில் 13 பேருக்கும் ஈரோட்டில் 20 பேருக்கும் நாமக்கல்லில் 22 பேருக்கும் திருவள்ளூரில் 19 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,31,286 பேராகும். அரியலூரில் 4,690 பேருக்கும் செங்கல்பட்டில் 51,540 பேருக்கும், கோவையில் 54,384 பேருக்கும், கடலூரில் 24,934 பேருக்கும், தருமபுரியில் 6582 பேருக்கும் காஞ்சியில் 29,263 பேருக்கும் திருவள்ளூரில் 43,547 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+