சென்னை தி நகரில் பெரும் பரபரப்பு.. 6.5 கிலோ தங்க வேட்டை! நகை பட்டறையில் அபேஸ் செய்த கொள்ளையர்கள்
சென்னை: சென்னை தி நகரில் உள்ள நகை பட்டறை ஒன்றில் 6.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள் நிறைந்த சென்னையின் பரபரப்பான வணிகப் பகுதியாக தியாகராய நகர் திகழ்ந்து வருகிறது. எப்போதும் மக்கள் நடமாட்டமும் பரபரப்பும் நிறைந்த இப்பகுதியில் நகைப் பட்டறை நடத்தி வருபவர் நந்தகுமார். பழைய தங்க நகைகளை உருக்கி புதிய நகைகளாக செய்து கொடுப்பதே இந்த நகைப் பட்டறையின் வேலை. இங்கு 6 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்து உள்ளனர்.

இந்த நிலையில் இந்த நகைப் பட்டறையில் இருந்த சுமார் 6.5 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நகைப் பட்டறை உரிமையாளர் நந்தகுமார் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நகைப் பட்டறையில் பணிபுரிந்து வந்த ரோகித், ராகுல், அஸ்வின், அனில், மாதேவ், விநாயக் ஆகியோரை அழைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நகைப் பட்டறையின் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து உள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். எப்போதும் பரபரப்புடன் இருக்கும் சென்னை தி நகரில் உள்ள நகைப் பட்டறையில் 6.5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications
