தமிழ்நாட்டில் இன்று 6,596 பேருக்கு கொரோனா.. உயிரிழப்பும் குறைகிறது.. சென்னையில் தொடர் சரிவு!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 166 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு 33 நாளாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 1,000 க்கும் கீழ் தினசரி பாதிப்பு பதிவாகி வருகிறது.

6,596 பேருக்கு கொரோனா
கொரோனாவை தடுக்க தமிழ்நாட்டில் ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது கொரோனா 2-வது அலை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 6,596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழப்பும் குறைவு
இதனால் மொத்த பாதிப்பு 24,43,415 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 166 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் கொரோனாவுக்கு 20 பேர் இறந்துள்ளனர்கோவையில் அதிகபட்சமாக 25 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 31,746 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 10,432 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 23,58,785 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்

சிகிச்சை பெறுபவர்கள் எத்தனை பேர்?
52,884 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 1,66, 628 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 3,08,51,147 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மேலும் 396 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 6-வது நாளாக பாதிப்பு 500-க்கும் கீழே குறைந்து விட்டது. சென்னையை விட கோவையில் பாதிப்பு தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. கோவையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

கோவை தொடர்ந்து முதலிடம்
கோவையில் மட்டும் 793 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 277 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 92 பேருக்கும், மதுரையில் 120 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 122 பேருக்கும், திருவள்ளூரில் 183 பேருக்கும், திருச்சியில் 247 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 419 பேருக்கும், விருதுநகரில் 91 பேருக்கும், ஈரோட்டில் 686 பேருக்கும், சேலத்தில் 472 பேருக்கும், நாமக்கல்லில் 269 பேருக்கும், தஞ்சாவூரில் 338 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications